Tips Policemen Follow To Face Every Situation : பயம் இல்லாத மனிதர்களே இந்த உலகில் இல்லை. அனைவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்தால் கண்டிப்பாக பயம் இருக்கும். அதனை எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. வாழ்வில் ஒரு சின்ன அசெளகரியம் ஏற்பட்டாலும் கூட, பலர் பயந்து போய் அதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிப்பதுண்டு. மனதளவில் உறுதியுடன் இருந்தாலே, நம்மை நோக்கி வரும் சவால்களை எளிதாக சமாளிக்கலாம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. போலீஸ்காரர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் பல சமயங்களில் பயம் இல்லாமல் சூழல்களை எதிர்கொள்ள சில யுத்திகளை கையாள்வதுண்டு. அவற்றை, சாதாரண மக்களும் கூட பின்பற்றி வாழலாம். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
மனதளவில் உறுதி:
போலீஸார் போல, உங்கள் மனதை பலமாக ட்ரெயினிங் செய்ய வேண்டும். அழுத்தம் நிறைந்த சூழல்களை கையாள்வதற்கு ஏற்ப உங்களது மனதை தயார்படுத்த, ஜர்னல் எழுதுவது, தியானம் செய்வது, உங்களிடம் நீங்களே பாசிடிவாக பேசுவது போன்றவை உதவும்.
தயாராக இருத்தல்:
போலீஸ் அதிகாரிகள், அவசர காலத்திற்கும், எந்தவித சூழலுக்கும் ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ள மனதை தயார் படுத்த வேண்டும். முதலுதவி, தற்காப்பு அல்லது பொது இடங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது போன்ற சவால்களுக்கும் நீங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது பயத்தை உடைக்கும்.
திட்டம்:
காவல்துறை அதிகாரிகள் தெளிவான நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். தேர்வுகள், நேர்காணல்கள் அல்லது கடினமான உரையாடல்களுக்கு முன் ஒரு திட்டத்தை உருவாக்குவதன் மூலம் நீங்கள் அதை இயல்பு வாழ்வில் பயன்படுத்தலாம். பின்பற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து சிந்தித்தால் நீஙள் உங்கள் மனதை பீதியடையாமல் வைத்திருக்க முடியும்.
சுவாச பயிற்சி:
பயிற்சி பெற்ற காவல் அதிகாரிகள் கூட அமைதியாக இருக்க சுவாசத்தைப் பயன்படுத்துகிறார்கள். பாக்ஸ் ப்ரீத்திங் எனப்படும் சுவாச பயிற்சி முறையை பின்பற்றலாம். 4 வினாடிகள் உள்ளிழுக்கவும், 4 வினாடிகள் வைத்திருக்கவும், 4 வினாடிகள் மூச்சை வெளியேற்றவும், 4 வினாடிகள் வைத்திருக்கவும் - இது உங்கள் இதயத் துடிப்பைக் குறைத்து உங்கள் மனதை தெளிவுபடுத்துகிறது.
ஆதரவு:
போலீசார் ஒருபோதும் தனியாக வேலை செய்வதில்லை - அவர்கள் குழுக்களாக வேலை பார்க்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில், கடினமான காலங்களில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை நம்புங்கள். யாராவது ஒருவர் உங்களுக்காக இருக்கிறார்களா என்பதை அறிவது பயத்தை சிறப்பாக எதிர்கொள்ள உதவும்.
கவனித்தல்:
காவல் துறையினர் எந்த இடத்திலும் யோசித்து விட்டு செயல்படுகின்றனர். எனவே, எந்த விஷயம் உங்கள் கண்முன் இருந்தாலும் உடனே ரியாக்ட் செய்யாமல் யோசித்து, நிதானமாக செயல்படுங்கள்.
அதிகமாக எதிர்கொள்வது:
காவல்துறையினருக்கு அதிக அனுபவம் கிடைக்கும் போது, அவர்களின் பயம் குறையும். பொதுவெளியில் பேசுவது, கடுமையான சூழல்களில் இருப்பது போன்ற சிறிய பயங்களை நீங்களும் தொடர்ந்து எதிர்கொள்ளலாம். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் அடுத்த அடியை எளிதாக்குகிறது.
மேலும் படிக்க | எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? 7 ஈசியான டிப்ஸ்!
மேலும் படிக்க | எப்போதும் அழகா இருக்க சிம்பிள் டிப்ஸ்! முயற்சி செய்தா நீஙகளே எவர்கிரீன் ஹீரோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









