சீதா நவமி 2022: சித்திரை மாதத்தின் வளர்பிரை நவமி தினத்தன்று அன்னை ஜானகி உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இந்த நாள்,  சீதா நவமி என்றும் அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசர் ஜனகரின் தேர்க்காலில் கிடைத்த பெட்டியில் இருந்ததால், ஜனகனின் மகள் ஜானகி என்ற பெயரைப் பெற்ற மைதிலி கண்டெடுக்கப்பட்ட நாள் ஜானகி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.


இந்த ஆண்டு சீதா நவமி மே 9ம் தேதியன்று அனுசரிக்கப்படும். அன்னை சீதைக்காக அனுசரிக்கப்படும் இந்த நன்னாளில் பூஜை செய்யும் விதிகள், நல்ல நேரம் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை தெரிந்துக் கொள்வோம்.


அயோத்தியில் ராமர் (Lord Ram) அவதரித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, அன்னை சீதை பூமியில் அவதரித்தாள். எனவே ராம நவமிக்குப் பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு சீதா நவமி கொண்டாடப்படுகிறது. 


மேலும் படிக்க | புதன் ராசி மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்


பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு சீதா நவமி திதி, மே 09 திங்கட்கிழமை மாலை 06:32 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேதி அடுத்த நாள் மே 10 செவ்வாய் அன்று மாலை 07:24 மணிக்கு முடிவடையும். 


பூஜை செய்ய சுப நேரம், மே பத்தாம் தேதி  காலை 10.57 முதல் மதியம் 1:39 வரை என்று ஜோதிடம் கூறுகிறது.



சீதா நவமியின் முக்கியத்துவம்


ஜானகி ஜெயந்தி அல்லது சீதா நவமி நாளில், திருமணமான பெண்கள் விரதம் அனுசரித்து அன்னை சீதையை வழிபடுவார்கள். அன்னை சீதையின் அருளால், தங்கள் மாங்கல்யம் பலப்படும் என்று இந்து பெண்கள் நம்புகின்றனர்.


கணவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து, நல்வாழ்வை வாழ்ந்திட சீதா நவமி கொண்டாடப்படுகிறது.பூமியை உழுதுக் கொண்டிருந்த மிதிலா அரசர் ஜனகர், ஏர் உழும்போது, மண்ணில் புதைந்திருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் குழந்தை சீதை இருந்தார்.  


மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


குழந்தையாய் இருந்தபோது, சீதை பந்து விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் இடுக்கில் பந்து  சென்றுவிட்டது. 


சிவதனுசு வைக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டியை குழந்தையாக இருந்த சீதை, தனது கைகளால் தள்ளிவிட்டு, இடுக்கில் இருந்த பந்தை எடுத்தாள். உண்மையில் சிவதனுஷை யாராலும் தூக்கவே முடியாது.


மகளின் செய்கையைப் பார்த்த ஜனகர், இந்த சிவதனுசை தூக்கி நிறுத்தி வில்லை வளைப்பவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தார்.


சீதைக்கு சுயம்வரம் வைத்தபோது, அதில் கலந்துக் கொண்ட அயோத்தியின் ராமர் சிவதனுசை கையால் வளைத்து,  சீதையை திருமணம் செய்துகொண்டார். 


கணவனுடன் காட்டுக்கு சென்று வாழ்ந்த சீதை, கணவர் மீது அன்பும் மதிபும் கொண்டு, பதிவிரதைகளில் ஒருவராக திகழ்ந்தார். சீதா, அன்னை லட்சுமியின் வடிவமாக கருதப்படுவதால், சீதா நவமியன்று, அன்னை ஜானகியை வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள், நிலைத்த மாங்கல்யம், மங்கா செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும், பல அதிசயங்கள் நடக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR