பால்கனியில் யோகா; 80 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி!!

பால்கனியில் யோகா செய்தபோது 80 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி!!

Updated: Aug 28, 2019, 02:28 PM IST
பால்கனியில் யோகா; 80 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி!!

பால்கனியில் யோகா செய்தபோது 80 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், பால்கனியில் யோகா செய்தபோது 80 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மெக்சிகோவின் நியூவோ லியோன் மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் அலெக்ஸா தெரசா (Alexa Terrazas), மெக்சின் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது தளத்தில் உள்ள பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவர் தன்னுடன் இருந்த தோழியிடம் தான் கடினமான யோகாவை செய்யப் போவதாகக் கூறியா அவர், பால்கனியின் விளிம்பில் உள்ள கண்ணாடியை பிடித்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கினார்.

அப்போது அவரது தோழி அவரை செல்போனில் புகைப்படம் எடுத்த்துள்ளார். சில வினாடிகள் தலைகீழாகத் தொங்கிய படி இருந்த அலெக்ஸா தெரசா, சற்றும் எதிர்பாராத வகையில் பிடி நழுவி கீழே விழுந்தார். சுமார் 80 அடி உயரத்தில் இருந்து, தரையில் விழுந்ததில் தெரசாவின் 2 கால்களும் முறிந்தன. மேலும் அவரது கைகள், முதுகு, இடுப்பு, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

சுருக்கமாக கூறினால், அவரது உடலில் உள்ள 110 எலும்புகள் உடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.