)
Black Coffee in Morning: பெரும்பாலும் மக்கள் காலையில் எழுந்தவுடன் தேநீர் மற்றும் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், சிலர் பிளாக் காபியையும் விரும்புகிறார்கள். ஆனால், பிளாக் காபி உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பது பல பிரச்சனைகளுக்கு உதவியாக இருக்கும். இது அதிகாலையில் உங்கள் தூக்கத்தைக் கலைப்பதோடு, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் வேளையில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. இந்நிலையில் காலையில் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இப்போது அறிந்துக் கொள்வோம்.
ஆற்றல் ஊக்கி மற்றும் கவனம்
காலையில் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பது ஆற்றலை அதிகரிக்கவும் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. உண்மையில், இதில் காஃபின் உள்ளது, இது உங்கள் மூளையை செயல்படுத்துகிறது மற்றும் உங்கள் செறிவை அதிகரிக்கிறது. காலையில் ஒரு கப் பிளாக் காபி குடித்து வந்தால் சோர்வை நீக்குகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் அதிக கவனத்துடன் நாளைத் தொடங்க உதவுகிறது. இது மூளை மற்றும் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
எடை இழப்பு
நீங்கள் எடை இழக்க விரும்பினால், பிளாக் காபி குடிப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன, அத்துடன் இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இது உடலில் உள்ள கொழுப்பு முறிவு செயல்முறையை துரிதப்படுத்துகிறது. எனவே, உடற்பயிற்சிக்கு முன் பிளாக் காபி குடிப்பது நல்லது, இது ஆற்றலை வழங்குகிறது மற்றும் உடற்பயிற்சியின் விளைவை அதிகரிக்கிறது.
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது
பிளாக் காபியில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. தினமும் பிளாக் காபி குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நோய்களையும் தவிர்க்கலாம். இது இதய நோய், நீரிழிவு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.
மன அழுத்தத்திலிருந்து நிவாரணம்
பிளாக் காபி உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பிளாக் காபி உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. இதில் காஃபின் உள்ளதால், இது டோபமைன் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுவதில் உதவியாக இருக்கும். இது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் செயல்படுகிறது. ஆனால் இதை அதிகமாக குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் நேஹா துபியா தனது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து தெரிவித்த கருத்துக்களாகும். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனையை பெறவும். இதனை ஜீ தமிழ் நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ