அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிவிட்டது. கடுமையான கோடை காலம் எல்லோரையும் வாட்டி எடுத்து வருகிறது. கோடை காலத்தில், நம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும், கடும் வெப்பத்தினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் பானங்களை தினமும் குடிப்பது அவசியம்.
கோடைகாலத்தில், உடல் சட்டுன்னு சோர்வாகிவிடும். இதனைப் போக்க, உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்கும் பானங்கள் அவசியம். அந்த வகையில் சுவையான ராகி பீட்ரூட் மில்க் ஷேக், சிறந்த தேர்வாக இருக்கும். கோடை காலத்திற்கு ஏற்ற உணவில் ராகி மிகச் சிறந்தது. குளுட்டன் அல்லாத உணவான ராகி என்னும் கேழ்வரகு, புரதம் மற்றும் கால்சியம், வைட்டமின்கள் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த அற்புத உணவு.
பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் பீட்ரூட் ராகி மில்க் ஷேக்
கேழ்வரகு மற்றும் பீட்ரூட் இரண்டுமே, மூட்டு வலி முதல், கொலஸ்ட்ரால் வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமைகிறது. தற்போது கடைகளில் முளைகட்டிய ராகி மாவு கிடைக்கிறது. முளை கட்டுவதால், ஊட்டச்சத்து இரட்டிப்பாகும் என்பதோடு, செரிமானத்திற்கும் எளிதாகிறது. பீட்ரூட்டும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டது.
ராகி பீட்ரூட் மில்க் ஷேக் தயாரிக்க தேவையான பொருட்கள்
1.முளைகட்டிய ராகி மாவு ஒரு சிறிய கப் ( உங்கள் வசதிக்கு ஏற்ப பீட்ரூட் ஜூஸ் ஒரு கப் பீட்ரூட்டை வேக வைத்து அரைத்துக் கொள்ளலாம் அல்லது பீட்ரூட்டை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்)
2. ஊறவைத்த முந்திரி பாதாம் சிறிதளவு
3. ஊற வைத்த சப்ஜா விதைகள் சிறிதளவு
4. ராகி பீட்ரூட் மில்க் ஷேக் தயாரிக்கும் முறை
முதலில் முளைகட்டிய ராகி மாவை ஒரு கப் எடுத்துக்கொண்டு அதில் பீட்ரூட் ஜூஸை கலந்து, அதனை அடுப்பில் வைத்து கைவிடாமல் கஞ்சி போல் தயாரிக்க வேண்டும். பீட்ரூட்டை வேகவைத்து அரைத்து இருந்தால், ராகி மாவை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்போது மிக்ஸி ஜாரில், பீட்ரூட் ஜூஸில் தயாரித்த ராகி கஞ்சி அல்லது ராகி கஞ்சி மற்றும் வேக வைத்த பீட்ரூட், ஊறவைத்த பாதாம் முந்திரிப் பருப்பு, ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கலக்க வேண்டும். இதில் ஊற வைத்த சப்ஜா விதைகளையும் கலக்க வேண்டும். இதில் சிறிது சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம். இப்போது ராகி பீட்ரூட் மில்க்ஷேக் எனும் ஹெல்த் ட்ரிங்க் அருந்த ரெடி ஆக உள்ளது.
ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்த சிறந்த பானம்
ராகி பீட்ரூட் மில்க் ஷேக் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த பானமாக இருக்கும். உடல் பருமனை குறைப்பது முதல், எலும்புகளை வலுவாக வைப்பது வரை பல்வேறு வகைகளில் ஆரோக்கிய பலன்களை அழிக்கக்கூடியது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, ரத்த சோகையை போக்கும் ஆற்றல் கொண்டது. இதில் சேர்க்கப்படும் பாதாம் மற்றும் முந்திரி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. மூளை நரம்பு இதயம் ஆகியவை வலுவாக இருக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அவசியம். இதில் சேர்க்கப்படும் சப்ஜா விதைகளிலும், ஆரோக்கிய கொழுப்பு அமிலம் உள்ளது. மேலும் சப்ஜா விதைகளில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. ராகி பீட்ரூட் மில்க் ஷேக், உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத பானம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
மேலும் படிக்க | தர்பூசணி விதைகளில் இருக்கு அற்புதமான நன்மைகள், லிஸ்ட் இதோ: தூக்கி மட்டும் போடாதீங்க
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் நோயாளிகளுக்கான்ன டயட் சார்ட்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









