Year 2022 Horoscope: இந்த ராசிகளுக்கு வேலை, தொழில், பண வரவு எல்லாம் வேற லெவலில் இருக்கும்

இந்த 4 ராசிக்காரர்களுக்கு, இந்த புத்தாண்டு தொழில் மற்றும் பணி தொடர்பான பல வித நன்மைகளை அளிக்கவுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 2, 2021, 03:21 PM IST
Year 2022 Horoscope: இந்த ராசிகளுக்கு வேலை, தொழில், பண வரவு எல்லாம் வேற லெவலில் இருக்கும்

New Year 2022 Horoscope: புத்தாண்டு பிறக்கப்போகின்றது. மக்கள் மனங்களில் புத்தாண்டு தொடர்பான பல எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வேலை வாய்ப்புகள் மிகக் குறைந்துள்ளன. இந்த நிகையில், வரவிருக்கும் 2022 புத்தாண்டில், வேலை வாய்ப்புகள் நன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.

சிலர் புதிய வேலைக்காகவும், சிலர் வேலை மாற்றத்துக்காகவும் காத்திருக்கின்றனர். பலர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். மொத்தத்தில், 2022 ஆம் ஆண்டில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் ரீதியான மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.

குறிப்பாக, இந்த 4 ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign), இந்த புத்தாண்டு தொழில் மற்றும் பணி தொடர்பான பல வித நன்மைகளை அளிக்கவுள்ளது. புத்தாண்டு 2022-ல் யாருடைய தொழில் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த ராசிக்காரர்களின் தொழில் பிரகாசமாக இருக்கும்

ரிஷபம்: ரிஷப (Taurus) ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு 2022ஆம் ஆண்டு வரப்பிரசாதமாக அமையும். வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக சிறந்த வாய்ப்புகள் எற்படும். இந்த வாய்ப்புகள் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைத் திறக்கும்.

நேர்காணல்களிலும் போட்டித் தேர்விலும் வெற்றி பெறுவீர்கள். இப்போது வேலையில் இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குருவின் அருளால் பதவி உயர்வு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு தொழில் துறையில் பல வித நன்மைகள் ஏற்படும்.

ALSO READ:சனி அமாவாசை 2021: வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்க செய்ய வேண்டியவை..!! 

கடகம்: கடக (Cancer) ராசிக்காரர்கள் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொழில் ரீதியாக பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். ஆனால் காலப்போக்கில் சூழ்நிலைகள் சாதகமாக மாறும். அரசு வேலை விரும்பும் நபர்களின் கனவு இந்த ஆண்டு நிறைவேறும். கடக ராசிக்காரர்களுக்கு அவர்கள் விருப்பப்படி வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நிலைமை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களும் உத்தியோகம் மற்றும் தொழிலில் அதிக லாபம் ஈட்டுவார்கள். நீண்ட நாட்களாக வேலை நேர்காணலுக்காக தயாராகி வருபவர்கள் இந்த ஆண்டு வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நினைத்தபடி பதவு உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்க உள்ளவர்களுக்கும் வெற்றி கிடைக்கும். குறிப்பாக ஆண்டின் கடைசி காலாண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் ஒரு முக்கியமான பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

கும்பம்: 2022 ஆம் ஆண்டு கும்ப (Aquarius) ராசிக்காரர்களுக்கு மிகவும் செழிப்பாக இருக்கும். புத்தாண்டு அவர்களின் தொழிலில் அளப்பரிய பலன்களைத் தரும். மேலும், வருமானம் அபரிமிதமாக உயரும். கும்ப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு பதவி, பணம் இரண்டையும் பெறுவீர்கள். அதே சமயம் தொழிலதிபர்களும் பெரிய லாபத்தைக் காண்பார்கள். பணி-வியாபாரத்தில் செய்யப்படும் மாற்றங்கள் நன்மை தரும். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு தொழில் ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ:ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு உச்சகட்ட கவனம் தேவை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News