30 கிலோ எடையை மளமளவென குறைத்த சிம்பு! இரவில் ‘இதை’ செய்தாராம்..

Actor Silambarasan Weight Loss Tips : நடிகர் சிம்பு, உடல் எடை அதிகரித்து பின்பு குறைத்தவர்களுள் ஒருவர். இவர், இதனை செய்தது எப்படி? டிப்ஸ், இதோ!  

Written by - Yuvashree | Last Updated : May 23, 2025, 11:48 AM IST
  • உடல் எடை குறைந்த சிம்பு
  • இரவில் செய்த விஷயம்..
  • அவரே சொன்ன டிப்ஸ்..
30 கிலோ எடையை மளமளவென குறைத்த சிம்பு! இரவில் ‘இதை’ செய்தாராம்..

Actor Silambarasan Weight Loss Tips : தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார் சிம்பு. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு, குண்டாக இருந்த தனது தேகத்தை குறைத்தார். இதை இவர் செய்தது எப்படி தெரியுமா?

உடல் எடை குறைந்த சிம்பு..!

தமிழ் மக்கள், சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவர், சிலம்பரசன். குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி, இப்போது டாப் ஹீரோவாக இருக்கிறார். இவர், கொராேனா ஊரடங்கிற்கு முன்பு உடல் எடை கூடி, பெரிதாக காணப்பட்டார். ஆனால், கோவிட்டில் வீட்டில் இருந்த போது, பலவித உடற்பயிற்சிகளை செய்து உடலை குறைத்தார். இப்போது சிம்புவிற்கு 42 வயதாகிறது. இந்த வயதிலும், உடல் எடையை குறைத்த பிறகு அவர் சரியாக அதனை மெயின்டெயின் செய்கிறார். இதற்காக அவர் என்னென்ன செய்தார் என்பது குறித்து இங்கு பார்ப்போம். நடிகர் சிம்பு, 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 கிலோ எடையை குறைத்ததாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதற்கான டயட், உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதையும் அவர் அதில் பகிர்ந்திருந்தார்.

சிம்புவுக்கு உதவிய உடற்பயிற்சிகள்:

நடிகர் சிம்பு, செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கும் போது, சுமார் 101 கிலோ இருந்திருக்கிறார். அந்த படத்தில், ஒரு காட்சிக்காக அவர் ஓட வேண்டியிருந்தது. அப்படி ஓடியபோது அவருக்கு முட்டியெல்லாம் வலித்திருக்கிறது. இதனால், எப்படியாவது உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்த இவர், தொடர் முயற்சியால் கிட்டத்தட்ட 30 கிலோ எடை குறைந்து, இப்போது 71 கிலோ எடை இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்புவிற்கு உடல் எடையை குறைக்க அவரது உடற்பயிற்சிகள் வெகுவாய் உதவியிருக்கின்றன. இதற்காக இவர் களரிபயாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது, வாளை வைத்து செய்யும் சண்டை பயிற்சியாகும். அதே போல, கம்பை வைத்து செய்யும் சிலம்பாட்ட பயிற்சியையும் பின்பற்றி இருக்கிறார். இவை இரண்டுமே தென்னகத்தின் பழைமையான சண்டை பயிற்சிகள் ஆகும். அது மட்டுமல்ல, சிம்புவிற்கு நடனமாடவும் மிகவும் பிடிக்கும். எனவே, இதையும் தனது வர்க்-அவுட் ரெட்டீனில் சேர்த்துக்கொண்டார். 

டயட்:

சமீபத்தில் ஃபிட்னஸ் பற்றி பேசிய நடிகர் சிம்பு, தனது டயட் பற்றியும் பேசினார். இந்த வயதில் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று கூறிய அவர், ஆனால் அதற்காக நம் உடல் நலனை உதாசினமாக நினைக்க கூடாது என்று கூறினார். 

உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சிம்பு, இரவில் குறைவாக சாப்பிட்டு விட்டு உறங்க செல்லுங்கள் என்கிறார். கொஞ்சம் பசியோடு இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அதிகம் சாப்பிட்டு விட்டு உடனே உறங்க செல்ல வேண்டாம் என்கிறார். 

தினமும் காலை 4:30க்கு எழுந்து கொள்ளும் சிம்பு, வேக நடைப்பயிற்சியை பின்பற்றுகிறார். மேலும், ஜிம்மிற்கு சென்று தனது உடலின் வெவ்வேறு உடல் பாகங்களுக்கான உடற்பயிற்சிகளை செய்கிறார். தனது டயட்டில் இருந்து அனைத்து துரித உணவுகளையும் நீக்கிய சிம்பு, உடல் எடையை குறைப்பதற்காக முழுமையாக சைவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்பவராக மாறினாராம். சிம்பு, எடையை குறைப்பதற்காக கலோரி டெஃபிசிட் டயட், புரத உணவுகள் அதிகம் சேர்ப்பது உள்ளிட்டவற்றையும் மேற்கொண்டாராம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், இது சார்ந்த நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 

மேலும் படிக்க | '3 மாதங்களில் 9 கிலோ' உடல் எடையை குறைக்க உதவியது என்ன? நடிகை ஜோதிகா பகிர்ந்த சீக்ரெட்!

மேலும் படிக்க | 54 வயதில் 20 கிலோ குறைத்தது எப்படி? குஷ்பூ சொன்ன ‘அந்த’ ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News