சாப்பிட்ட பின் தூக்கம் தூக்கமா வருதா? ‘இதை’ குடித்தால் ஆக்டிவாக இருக்கலாம்..

Tips To Control Afternoon Nap : நம்மில் பலருக்கு சாப்பிட் பின், தூக்கம் கண்ணை கட்டும். அப்படி தூக்கம் வராமல் இருக்க சில நடைமுறை பழக்கங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2025, 07:28 PM IST
  • மதியம் தூக்கம் வருதா?
  • எதையெல்லாம் செய்தால் உறக்கம் வராது?
  • சில டிப்ஸ், இதோ!
சாப்பிட்ட பின் தூக்கம் தூக்கமா வருதா? ‘இதை’ குடித்தால் ஆக்டிவாக இருக்கலாம்..

Tips To Control Afternoon Nap : “உண்ட மயக்கம் தொண்டை வரைக்கும்” என்பார்கள். சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதை இப்படி குறிப்பிடுவர். அலுவலகத்தில் வேலை செய்யும் பலருக்கு, மதிய விலையில் உணவு அருந்தியுடன் அப்படி ஒரு தூக்கம் கண்ணை சொக்கும். இது பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினைதான். இந்த தூக்கம் வந்த பிறகு அவர்களுக்கு செய்யும் வேலை அலுத்து போய்விடும். இதனால் ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் என்று தோன்றும். சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது சோம்பேறித்தனத்தால் மட்டுமல்ல, இரவு தூங்காததால் அல்லது சரியான ஓய்வு கிடைக்காததாலும் இருக்கலாம். இந்த பிரச்சினையை தீர்க்க சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?

Add Zee News as a Preferred Source

சமநிலையான உணவுகள்:

பிரட், பாஸ்தா, கூல் ட்ரிங்க் போன்றவை உங்களது மதிய உணவாக இருந்தால் உங்களுக்கு தூக்கம் வரலாம். உங்களது மதிய உணவில் கார்ப்ஸ், சர்க்கரை சேர்த்த உணவுகள் அதிகமாக இருந்தால் உடலில் இருக்கும் சர்க்கரை ரத்த அளவு அதிகமாகி தூக்கத்தை வரவழைக்கலாம். இதனை சமநிலையான உணவு மூலம் சமாளிக்கலாம். உதாரணத்திற்கு மெல்லிய புரதம் கொண்ட சிக்கன், tofu எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பிரவுன் அரிசி, கியினாவோ, அவகேடோ, அதிக காய்கறிகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

அதிக உணவு: 

பல சமயங்களில் வயிறு முட்ட அதிகமாக சாப்பிட்டுவிட்டால் இந்த தூக்க கலக்க நிலை ஏற்படலாம். பொறித்த உணவுகள், கிரீமியாக இருக்கும் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்டவை உங்களின் நாவிற்கு தற்காலிக சுவையை கொடுக்கலாம். ஆனால், உங்கள் உடலை சோம்பேறி தனத்துடன் உணரச்செய்யும். இது பாேன்ற உணவுகள், செரிமானம் ஆக நேரம் எடுத்துக்கொள்வதால் இப்படி தூக்ககலக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

சாப்பிட்ட பின் செய்ய வேண்டியது:

சாப்பிடுவதற்கு முன்பு, அல்லது சாப்பிட்ட பின்பு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் கூட தூக்கம் வரலாம். இதனால் உடலில் ஆற்றல் குறைகிறது. அதிலும், சாப்பிட்ட பின்பு அந்த எனர்ஜி மொத்தமாக போய் விடுகிறது. இதனால், சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் சில மருத்துவர்கள்,  சாப்பிட்ட பின், பொறுமையாக இன்னொரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டுமாம். இது, உங்களை நீங்களே ஆக்டிவாக வைத்துக்கொள்ள உதவலாம்.

உணவு கட்டுப்பாடு:

எப்போதும் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும் கூட உங்கள் வயிறு உப்பசத்துடன் இருப்பது போலவும், மிகவும் சோர்வுடன் இருப்பது போலவும் தோன்றலாம். எனவே, உங்கள் வயிறு நிறையும் வரை எப்போதும் சாப்பிடாதீர்கள். பசிக்கு அதிகமான உணவை எப்போதும் எடுத்துக்கொள்ளாதீர்கள். அளவுடன் உணவுகளை எடுத்துக்கொண்டு, உங்கள் உடலின் ஆற்றல் செயலிழக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சி:

சாப்பிட்டு முடித்த பின்பு, உறக்கம் வருவது போல இருந்தால் 10-15 நிமிடங்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாம். இதனால், நீங்கள் சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானம் ஆவதோடு, உங்கள் உடலின் ரத்த சர்க்கரை அளவும் சரியாக இருந்து, உடலுக்கு ஆற்றலையும் அளிக்கும். தூக்கமும் குட்-பை சொல்லிவிடும்.

மேலும் படிக்க | எடை ஏறாமல் இருக்க ராஷி கண்ணா செய்யும் விஷயம்! ஒரு நாளும் மிஸ் பண்ண மாட்டாராம்..

மேலும் படிக்க | த்ரிஷாவின் உடல் குறைவுக்குப் பின்னால் இருக்கிற அதிர்ச்சி தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News