Personal Loan Tips: வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், நம்மில் பலர் நிச்சயம் கடன் வாங்கும் சூழ்நிலையை எதிர்கொண்டிருப்போம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி ஏதும் செய்ய முடியாத நிலையில், உடனடியாக கை கொடுக்கக் கூடியது தனி நபர் கடன். வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் NBFC, Fintech ஆகியவை தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
கிரெடிட் கோர் அல்லது சிபில் ஸ்கோர்
தனிநபர் கடன்களை வழங்குவதற்கு முன், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், நிர்ணயிக்கப்பட்ட சில தகுதி வரம்புகளை விண்ணப்பதாரர் பூர்த்தி செய்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்றன. தனிநபர் கடன் ஒப்புதல் பெறுவதற்கு கிரெடிட் கோர் அல்லது சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, தனிநபர் கடன் விண்ணப்பதாரரின் வயது, வருமானம், வேலையின் தன்மை, கடன் வருமான விகிதம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடன் வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்படுகின்றன.
சிறந்த கிரெடிட் ஸ்கோர் மூலம் வட்டி விகிதத்தை குறைக்கலாம்
கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் சிறப்பாக இருப்பவர்களுக்கு, கடன் ஒப்புதல் உடனடியாக கிடைக்கிறது. அதோடு வட்டி விகிதத்தை குறைக்கும் படி, வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்களிடம் கோரிக்கை வைப்பதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது. அதோடு கடன் செயலாக கட்டணங்கள் உள்ளிட்ட சில சலுகைகளையும் பெற வாய்ப்பு உண்டு.. 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர்அல்லது சிபில் ஸ்கோர், சிறந்த மதிப்பெண்ணாக கருதப்படுகிறது.
குறைவான கிரெடிட் ஸ்கோர் ஏற்படுத்தும் பாதிப்புகள்
கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிக ஸ்கோருக்கு கடன் வட்டி விகிதம் குறைக்கப்படும் நிலையில், குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதோடு கடனுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கடுமையாக்கப்படும் வாய்ப்பு உள்ளது
கடன் - வருமான விகிதம்
நீங்கள் வாங்கும் மாத சம்பளத்தில், கடனை திருப்பி செலுத்த முடியுமா என்பதை DTI விகிதம் கூறுகிறது. அதாவது உங்கள் வருமானத்திற்கும் நீங்கள் செய்யும் செலவுகளுக்கும் இடையிலான விகிதம். உங்கள் செலவில், இஎம்ஐ, கிரெடிட் கார்டு பில்கள் ஆகியவை அடங்கும். கடன் செலவு விகிதம் 35% அல்லது அதற்கு குறைவாக இருந்தால் வங்கிகள் தயக்கம் இன்றி கடன் தரும். DTI விகிதம் 36 சதவீதம் முதல் 50% வரை இருந்தால் சில நிபந்தனைகளுடன் கடன் தர ஒப்புக் கொள்ளலாம். DTI விகிதம் 50% என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் கடனுக்கு ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்கள்
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். KYC ஆவணமாக உங்கள் புகைப்படம், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வருமானம் தொடர்பான ஆவணங்களில் வங்கி பாஸ்புக் அல்லது கணக்கு அறிக்கை மற்றும் சம்பள சீட்டு மற்றும் வருமான வரி கணக்கு (ITR) ஆகியவை தேவை.
வேலையில் உள்ள நிலைத்தன்மை
வங்கிகள் அல்லது NBFC நிறுவனங்கள் விண்ணப்பதாரரின் வேலையில் உள்ள நிலைத்தன்மையை கருத்தில் எடுத்துக் கொள்கின்றன. ஏனெனில் நிலையான வருமானம் இருந்தால் தான் EMI தொகையை தவறாமல் செலுத்த இயலும். அரசு வேலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது பிரபல தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ