நமது வாழ்க்கையில் நாம் பலதரப்பட்ட நபர்களை சந்தித்திருப்போம். அதில் சிலர் நம்மை தர்ம சங்கடப்படுத்தும் வகையில், நடந்து கொண்டு மன வருத்தத்தை ஏற்படுத்துவார்கள். நண்பர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர், காமெடி என்ற பெயரில் நம்மை அவமானப்படுத்தும் வகையிலும், தாழ்வு மனப்பான்மையை தூண்டிவிடும் வகையிலும் செயல்பட்டு, நம் மனதை புண்ணாக்குவார்கள். இந்த வகையில், அநாகரீகமாக நடந்து கொள்ளும் நபர்களை எப்படி கையாள்வது என்பதை இன்றைய கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் நலனை விரும்பும் நண்பர்கள் அல்ல
பொதுவாக உண்மையான நண்பர்கள், நமது பலவீனங்களை வெட்ட வெளியில் போட்டு உடைத்து நம்மை தர்மசங்கட படுத்த விரும்ப மாட்டார்கள். மாறாக நாம் எல்லா விஷயங்களையும் சிறப்பாக செயல்பட உதவுவார்கள். எனவே நண்பர்கள் என்ற பெயரில், உங்களை காமெடி பீஸ் ஆக ஆக்க முயற்சிக்கும் நபர்கள், உண்மையில் உங்கள் நலனை விரும்பும் நண்பர்கள் அல்ல (Toxic Friends) என்பதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கத் தயங்க கூடாது. அப்படிப்பட்டவர்களை எவ்வாறு எளிதாக சமாளிக்கலாம் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
எல்லைகளை நிர்ணயித்து விலக்கி வைத்தல்
நகைச்சுவை என்ற பெயரில் எல்லை மீறுபவர்களுக்கு, அவர்களது எல்லை என்ன என்பதை சுட்டிக்காட்டி, மிகத் தெளிவாக நீங்கள் செய்வது எனக்கு பிடிக்கவில்லை என்று தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இதன் மூலம் அடுத்த முறை உங்களை கேலி செய்ய 100 முறை அல்ல; 1000 முறை யோசிப்பார்கள். அதோடு இது போன்றவர்களுடன், தூரத்தை பராமரிப்பது நல்லது. அவர்களுடன் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் எதையும் பகிர்ந்து கொள்ளாமல், நீங்கள் நலமா - நானும் நலம் என்ற வகையில் பழகுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களது எல்லை என்ன என்பதையும் தெளிவாக புரிய வைக்கலாம்.
நகைச்சுவைக்கும் அவமதிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குதல்
சிலர், தாங்கள் மனதை கஷ்டப்படுத்துகிறோம் என்று தெரியாமலேயே, நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களை அவமதிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை கையாள, நீங்கள் செய்த செயல் தங்களுக்கு வருத்தமாக இருந்தது என்றும், இது நகைச்சுவை அல்ல அவமதிக்கும் செயல் என்றும் விளக்க வேண்டும்.இதனால் நமக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
அமைதி காக்காமல் தக்க பதிலடி கொடுப்பது அவசியம்
காமெடி என்ற பெயரில் ஒருவர் அடிக்கடி அவமானப்படுத்தினால், அமைதியாக கடந்து செல்வது மிகவும் தவறு. இது அவமதிக்கும் செயல் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பதை தெளிவாக உடனே எடுத்துக் கூற வேண்டும். நீங்கள் பதில் ஏதும் சொல்லாமல் கடந்து சென்றால் அதனை உண்மை என்று ஏற்றுக் கொண்டதாக பொருள்படும்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும்
பல நேரங்களில் இது போன்ற சமயங்களில், பாதிக்கப்பட்ட நபர் தன்னம்பிக்கையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் மீது நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பது முக்கியம். அப்போதுதான் நீங்கள் தயங்காமல், தக்க பதிலடி உடனே கொடுக்க இயலும். இல்லை என்றால் ஒரு குற்ற உணர்வுடன் அல்லது அவமானத்துடன் மௌனமாக இருந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதால், உங்களை கேலி செய்யும் நபர்களை எளிதாக கையாளலாம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... மூளை முதல் இதயம் வரை... உடலை சல்லடையாய் துளைக்கும் மன அழுத்தம்
மேலும் படிக்க | அழகை கெடுக்கும் இரட்டைக் கன்னம் நீங்க... தினமும் செய்ய வேண்டிய 3 பயிற்சிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ