)
Tips To Make Wet Clothes Dry : தமிழ் நாட்டில் மே மாதத்திலேயே யாரும் எதிர்பாராத வகையில் அவ்வப்போது அதிகமாக மழை பெய்து வருகிறது. காலையில், வெயில் அடிக்கிறது என்று நினைத்து துணியை துவைத்து மாடியில் காயப்போட்டால், சிறிது நேரத்திலேயே மழை பெய்து துணியை நனைத்து விடுகிறது. மழை பெய்யாத நாட்களிலும் கூட, வெயில் இல்லாத காலங்களில் காற்றில் ஈரப்பதம் இருப்பதல் துணி காய நேரம் எடுக்கும். அல்லது வெயிலில் உலர வைப்பது போல, காய வைக்க முடியாது. இதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
வீட்டில் துணி உலர்த்துவதால் என்ன பிரச்சனை வரும்?
வெளியில் மழை பெய்தால், நாம் வீட்டிற்குள் துணையை காய வைப்பது வழக்கம். வெளியில் துணி காயாது என்கிற காரணத்தால், வீட்டிற்குள் காய வைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இப்ப்டி காய வைப்பதால், வீட்டிற்குள் துர்நாற்றம் சுழலலாம். வீட்டிற்குள் துணி காயப்போடும் போது, அதிலிருந்து தண்ணீர் சொட்டுவதால் சுவர் சீக்கிரமாக சேதமடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதே போல ஈரப்பதம் அதிகரித்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இது ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், மேற்கூறிய பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
விரைவாக உலர்த்த டிப்ஸ்:
துணிகளை துவைத்த பின், அதனை நன்கு அலசிய பின்பு, கை முறுக்க பிழிய வேண்டும். வாஷிங் மெஷின் இருந்தால், அதில் டிரைய்யரில் போட்டு உலர்த்திக்கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில், துணியை தண்ணீர் சொட்டாத அளவிற்கு நன்கு பிழிய வேண்டும். இதனால் துணிகள் சிறிது நேரம் காய்ந்தாலும் விரைவாக காயும்.
ஹேர் ட்ரையர்:
உங்கள் துணிகளை உலர்த்த, ஹேர் ட்ரையரை பயன்படுத்தலாம். ஈரப்பதமான துணிகளை ஹேர் ட்ரையரை வைத்து உலர்த்தும் போது, இரண்டையும் சிறிது தொலைவில் வைத்துக்கொள்வது நல்லது. இது, உங்களின் ஈரமான துணிகளை காயவைக்கும் வழிகளுள் ஒன்றாகும். அதே போல, சிறிது காய்ந்த துணிகளை, விரைவில் காய வைக்க, இது ஒரு வழியாக இருக்கிறது. மேஜை மின்விசிறிகளையும் (டேபிள் ஃபேன்) துணி உலர வைக்க பயன்படுத்தலாம்.
அயர்ன் பாக்ஸ்:
துணி, மிகவும் ஈரமாக இருக்கும் போது அயர்ன் பாக்ஸை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. இதனால் ஷாக் அடிக்க அல்லது விபத்துகள் நிகழ வாய்புள்ளது. ஓரளவு காய்ந்த துணியை, குறைந்த சூட்டில் வைத்து அயர்ன் செய்யலாம். இதனால் துர்நாற்றம் ஏற்படாது, ஈரப்பதத்தையும் குறைக்கும். ஆனால், இதே டெக்னிக் அனைத்து நேரங்களிலும் வேலை செய்யாது. பாலியஸ்டர் மற்றும் சூட்டிற்கு சென்சிடிவாக இருக்கும் துணிகளில் அயர்ன் பாக்ஸை உபயோகிக்கும் போது இது உபயோகம் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
துணி துவைத்த பின், உலர்ந்த டவலை எடுத்து, உங்கள் துணியில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் தண்ணீரை உறிஞ்ச பயன்படுத்த வேண்டும். துணிகளை காய வைக்கும் போது, அதனை நேரடியாக மின்விசிறிக்கு கீழ் காய வைக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ