முகத்தில் இருக்கும் துளைகளை விரைவில் சரிசெய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ..!
Health Tips: முகத்தில் இருக்கும் துளைகளை சரி செய்வது எப்படி? குழப்பமே வேண்டாம். இந்த சிம்பிள் டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்கள்.
நம்மில் பலருக்கு, முகத்தில் பள்ளம் போன்ற சிறுசிறு துளைகள் இருக்கும். இந்த பிரச்சனை உள்ள பலர், இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் சமயங்களில் விழிபிதுங்கி கொண்டிருப்பர். அவர்களின் சந்தேகத்தை தீர்க்க இந்த செய்தி தொகுப்பு கண்டிப்பாக உதவும்.
முகத்தில் துளைகளா? இது எப்படி ஏற்படும்?
நம் முகத்தில், விரிவடைந்துள்ள துவாரங்களைத்தான் நாம் Open pores என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு திறந்திருக்கும் துவாரங்களின் வழியாக, சருமத்தின் மேல் பகுதியில் சீபம் (பரு) உருவாகிறது. முகத்தில் அதிக அளவில் இந்த சீபத்தை சுரக்கும் சுரப்பிகள் (sebaceous glands) இருந்தால், அதுவும் குறிப்பாக ‘t-zone’ பகுதியில் (நெற்றி, மூக்கு மற்றும் கண்ணம்) இருந்தால் முகத்தில் பெரிய துவாரங்கள் ஏற்படலாம்.
எண்ணெய் பிசுபிசுப்பு அதிகம் உள்ள சருமம் உள்ளவர்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சரும வகைகள் இணைந்து உள்ளவர்களுக்கும் இத்தகைய பெரிய துவாரங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிக அளவில் சீபம் சுரப்பதனால் இவ்வாறு ஏற்படுகிறது. மரபு சார்ந்த காரணங்கள், இனம், வயது, பாலினம், சருமத்தின் நிலை போன்ற பல காரணங்களால் இத்தகைய துவாரங்கள் உருவாவதும், அவற்றின் அளவும், அவை பரவியிருக்கும் விதமும் நிர்ணயிக்கப்படுகின்றன.
மேக்-அப் போடும் போது கவனம் தேவை:
முகத்துக்கு செய்யும் மேக்-அப், முகத்தில் இருக்கும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து தான் முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது இதை பெரும்பாலானவர்கள் எதிர்கொள்கிறார்கள். மூக்கு சுற்றி கன்னங்களை சுற்றி தான் இந்த துளைகள் காணப்படுகிறது. சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக் அப் வழியாக இதை மறைப்பது சாத்தியமில்லை. இதை அப்படியே விட்டுவிடுவதும் சருமத்துக்கு நல்லது கிடையாது. இந்த பிரச்சனைகளால் பல பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என கூறப்படுகிறது இதற்காக பல ரெமடிஸ் ட்ரை செய்து பலன் இல்லாமல் போகிறது.
மேலும் படிக்க | நண்பேனே உங்கள் எதிரியாக மாறலாம் - இந்த 8 விஷயத்திலும் கவனமாக இருங்க மக்களே!
தற்காத்துக்கொள்வதற்கான வழிகள்..
உங்கள் முகத்தில் உள்ள திறந்துள்ள துவாரங்களை மூடுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தால், அதற்கு மிக முக்கியமாக உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருப்பதும், சூரிய ஒளி படாமல் வைத்திருப்பதும் அவசியம். பொதுவாக எந்த சிகிச்சையாலும் உங்கள் முகத்தில் உள்ள துவாரங்களை முழுவதுமாகவோ முற்றிலுமாகவோ நீக்கிவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேம்பட்ட சரும சிகிச்சை முறைகள் மூலம் இவை வெளியே தெரியாமல் செய்து, உங்கள் சருமத்தை வழவழப்பாகவும், பளபளப்பாகவும் மாற்ற முடியும். மேலும் உங்கள் சரும தோலின் அமைப்பை தடிமனாக மாற்றுகிறது. எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. சருமத்தின் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகளின் அதிகப்படியான செயல்பாட்டின் காரணமாக சருமத்தில் ஓபன் போர்ஸ் எனப்படும் சரும துளைகள் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டதும் பெரும்பாலானவர்கள் தாங்களாகவே கைவைத்தியம் செய்து கொள்ளுவார்கள். ஆனால் உங்கள் தோல் மருத்துவரின் ஒப்புதலின்றி எந்தப் பொருளையும் பயன்படுத்த வேண்டாம்.
குணப்படுத்துவதற்கான வழிமுறை..
முகத்தில் உள்ள பள்ளம் அல்லது துவாரத்தை இயற்கையாகவே நீக்கலாம். இயற்கையில் இந்த பிரச்சனையை குணப்படுத்த பல வழிகள் உள்ளன.
தேவையான பொருட்கள்:
2 டீ ஸ்பூன் கற்றாழை சாறு, வேப்பிலை ஒரு பிடி அளவு, தக்காளி, வெண்களிமண் (Kaolinite) 2 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வேப்பிலை, தக்காளி, கற்றாழை சாறு ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும். ஒரு கிண்ணத்தில் நன்கு வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கலவையுடன் கையொலின் கலி மண் 2 ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து கொண்ட பிறகு ஒரு திடமான நிலைக்கு வந்துவிடும். இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வரை வைத்து பின் கழுவி கொள்ளலாம். இதை வாரம் 3 முறை செய்து வந்தால் போதும் விரைவில் Open pores குணமடையும் என மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission 46% டிஏ ஹைக் உறுதி: வந்தது அதிரடியான அப்டேட்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ