Tips To Spot Liars Notice Body Languages : நாம் ஒருவரை முதல் முறை பார்க்கும் போது, கண்மூடித்தனமாக அவர் உண்மையான நபராக இருப்பார் என்று நினைத்து விடுகிறோம். அப்படி நாம் நினைப்பது, பல சமயங்களில் நமக்கே ஆப்பாக முடிந்து விடும். இதை தவிர்க்கதான், யாரிடம் பழகும் போதும் அவர்கள் நம்மிடம் எந்த மாதிரியான நோக்கத்துடன் பழகுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். அதை எப்படி கண்டு கொள்வது என்பதை இங்கு பார்ப்போம்.
முக பாவனைகள்:
உங்களிடம் பொய்யாக பழக வேண்டும், அல்லது பொய் கூற வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் வாயை மட்டும் உபயோகித்து சிரிப்பார்கள். அதை பார்க்கும் போதே உங்களுக்கு பொய்யான சிரிப்பு என்பது தெரிந்து விடும்.
அவர்கள் கூறும் வார்த்தையுடன், முக பாவம் ஒத்து போவாது. உதாரணத்திற்கு “உனக்காக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று அவர்கள் கூறும் போது, அவர்களின் முக பாவம் வேறு ஒன்றை கூறும்.
கண்ணை பார்த்து பேச மாட்டார்கள்:
பொய் கூறுபவர்கள், பெரும்பாலான சமயங்களில் எதிரில் இருப்பவர்களின் கண்களை பார்க்க மாட்டார்கள். பொய் கூறுவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சி காரணமாக அவர்கள், இப்படி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில பொய்க்காரர்கள், நன்றாகவே கண்ணோடு கண் பார்த்து பேசுவார்கள். அதே போல, கண்ணை பார்த்து பேசுபவர்கள் அடிக்கடி கண் சிமிட்டினாலோ, பேசும் போது ரொம்ப இடைவேளி விட்டு பேசினாலோ அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அர்த்தமாம்.
பதற்றம்:
அடிக்கடி முகத்தை தொடுதல், குறிப்பாக மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடுதல் பொய் கூறுபவர்களை காட்டி விடுமாம். முடியை கைகளால் சீவுவது, விரல்களை மேஜை மீது வைத்து ஆட்டிக்கொண்டே இருப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது இதற்கான அறிகுறிகள் ஆகும்.
சிறிய மாற்றங்கள்:
பொய் கூறுபவர்கள், இப்படித்தான் தனது முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவித முகமூடி போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். ஆனால், ஒரு உண்மையை நீங்கள் கூறும் போது பயம் அல்லது பதற்றம், அல்லது ஏதோ ஒரு உணர்ச்சி அவர்களின் முகத்தில் வந்து போகலாம்.
பதில் கூறுதல்:
அவர்கள் ஏதேனும் பதில் கூறும் போது, மிகவும் நீண்ட இடைவேளை விட்டு பதில் கூறுகிறார்கள் என்றால், அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் பதில் கூறுவது, அவர்கள் ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்த பதிலை கூறுவது போல இருக்கும், இயல்பாக கூறுவது போல இருக்காது.
செய்கைகள்:
பொய் கூறுபவர்கள் அல்லது பொய்யாக பழகுபவர்களின் செய்கைகள், பல சமயங்களில் அவர்களின் வார்த்தைகளுடன் ஒத்துப்போவாது. உதாரணத்திற்கு “ஆம்” என்று சொல்லிக்கொண்டு, “இல்லை” என்பது போல தலையாட்டுவார்கள். இப்படி, பல முறை செய்வார்கள்.
குரலில் மாற்றம்:
பொய் கூறுபவர்கள், திடீரென்று பிடிப்பட்டுவிட்டால் உடனே அவர்களின் குரலில் ஒரு வித மாற்றம் தெரியும். திடீரென கனீரென்ற குரலிலோ அல்லது மிகவும் குறைவான குரலிலோ பேசுவர். திடீரென அவர்கள் மூச்சு விடுவதில் மாற்றங்கள் ஏற்படலாம். அடிக்கடி தொண்டையை உருமுவர், அவர்களின் வாய் உலர்ந்து போகும்.
நிறைய பேசுவர்..
பொய் கூறுபவர்களிடம், அது பற்றி கேட்டால் அவர்கள் அதை பேசுவதாேடு மட்டுமல்லாது பல சம்மந்தம் இல்லாத விஷயங்களை பேசுவர். அது, பல சமயங்களில் அவர்களின் பொய்யை காட்டிக்கொடுத்து விடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









