சைலண்டாக இருந்து கொண்டு காரியத்தை சாதிக்கலாம்! ‘இதை’ பண்ணுங்க போதும்..

Tips To Stay Silent And Achieve Your Goals : நம்மில் பலர் சைலன்டாக இருந்து கொண்டு நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என நினைப்போம். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Feb 10, 2025, 04:33 PM IST
  • சைலண்டாக இருந்து கொண்டு எப்படி சாதிப்பது?
  • அதற்கான சில டிப்ஸ்..
  • எளிதில் வெற்றி பெறலாம்..
சைலண்டாக இருந்து கொண்டு காரியத்தை சாதிக்கலாம்! ‘இதை’ பண்ணுங்க போதும்..

Tips To Stay Silent And Achieve Your Goals : நாம் நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்றால் அது குறித்து முதலில் அமைதியாக இருப்பது அவசியம்.‌ அப்படி செய்தால் மட்டுமே பிறரின் தேவையற்ற கருத்துக்களில் இருந்தும் தடைகளில் இருந்தும் நம்மால் விடுபட முடியும். அப்படி நினைத்த காரியம் முடியும் வரை நாம் அமைதியாக இருக்க சில டிப்ஸ்கள் இதோ.

Add Zee News as a Preferred Source

தெளிவான இலக்குகள்: 

உங்கள் இலக்கு என்ன என்பதை ஒவ்வொரு படியாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஃபிக்ஸ் செய்த இலக்குகளை வாரம் மற்றும் மாதம் ஆகிய கணக்குகளில் பிரித்து தினந்தோறும் அதை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் உங்களது வெற்றிக்கனியை சீக்கிரமே ருசித்து விடலாம்.

எழுதி வைப்பது: 

உங்கள் இலக்குகளை குறித்து பிறரிடம் பேசுவதற்கு பதிலாக ஏதேனும் ஒரு நோட்டு புத்தகத்தில் அதை எழுதி வைக்கலாம். உங்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகள் அல்லது சின்ன சின்ன தோல்விகள் என அனைத்தையும் எழுதி வைத்து அதை சரி செய்யவோ மேம்படுத்தவோ நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் செயல்களே பேச வேண்டும்..

இதை செய்யப் போகிறேன் அதை செய்யப் போகிறேன் என முன்கூட்டியே எதையும் சொல்லலாமா என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை மட்டும் செய்யுங்கள். உதாரணத்திற்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் அது குறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்காதீர்கள். அதற்கான முயற்சிகளை மட்டும் விடாமல் மேற்கொண்டு கொண்டே இருங்கள்.

அதிகம் பகிர வேண்டாம்..

உங்களது இலக்குகள் அல்லது வெற்றிகள் குறித்த விஷயங்களை அனைவரிடமும் பகிர வேண்டாம். குறிப்பாக உங்களது நெற்றியை சிறுமைப்படுத்தி பேசுபவர்கள் உங்களை மட்டம் தட்ட நினைப்பவர்களிடம் அது குறித்து பேசாமலேயே இருப்பது நல்லது. எது தேவையோ அதை மட்டும் பேசி வெற்றி பெற்றது மற்றவற்றை பேசிக்கொள்ளலாம்.

உங்களைப் போன்று யோசிப்பவர்களுடன் இருங்கள்: 

வெற்றி என்பது பல சமயங்களில் கூட்டு முயற்சியாக இருக்கும். எனவே உங்களைப் போன்று யோசிப்பவர்களுடன் எப்போதும் இருங்கள். அப்போதுதான் உங்களுக்கும் சுய ஒழுக்கம் என்பது பிறக்கும்.

பிறர் உறுதிப்படுத்த வேண்டும் என நினைக்காதீர்கள்…

உங்கள் கனவு என்ன லட்சியம் என்ன என பிறரிடம் கூறும் போது அவர்கள் கண்டிப்பாக உங்களை பாராட்டவோ அல்லது இகழவோ செய்வார்கள். இதனால் நீங்கள் இதுவரை பெறாத ஒரு வெற்றியை ஏற்கனவே பெற்றுவிட்டது போல ஒரு மமதை வந்துவிடும். எனவே பிறர் உங்களுடைய முயற்சிகளை உறுதிப்படுத்த வேண்டும் நினைக்காமல் உங்கள் முயற்சியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அந்த உறுதியை நீங்களே உங்களுக்கு கொடுத்துக் கொண்டால் போதும்.

ஒழுக்கத்துடன் இருங்கள்..

எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சுய ஒழுக்கத்துடன் இருப்பது நல்லது. அப்போதுதான் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு சரியான பலன் கிடைக்கும்.

வெற்றியால் அனைவரையும் அதிர வையுங்கள்:

கடைசியில், உங்களுக்கான வெற்றியை பெறும் போது, அந்த வெற்றியே உங்களுக்காக பேசி விடும். உங்களை சுற்றி இருப்பவர்கள், “இவ்வளவு அமைதியாக இருந்து கொண்டு, இப்பேற்பட்ட சாதனையை செய்திருக்கிறாயே” என்று ஷாக் ஆகி விடுவர். எனவே, பின்வாங்க வேண்டும் என்கிற எண்ணம் வரும் போதெல்லாம் அதை நினைத்து பார்த்து முன்னேறி செல்லுங்கள்.

மேலும் படிக்க | உங்களை வார்த்தையால் அட்டாக் செய்பவரை சைலண்டா வாயை மூட வைக்கலாம்! 5 வழிகள்.

மேலும் படிக்க | மனத்தெளிவுடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி? இந்த அறிகுறிகள் இருக்கும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 
About the Author

Trending News