Tirupati Darshan Ticket Releasesed: ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயில் மிகவும் புகழ்பெற்ற வைணவ திருத்தலமாகும். வைணவ திருத்தலமான இந்த கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்த தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
வெளிநாட்டு பயணிகளும் திருமலை திருப்பதிக்கு வருகை தருவது உண்டு. தினமும் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் இந்த எண்ணிக்கை 2 லட்சம் வரை உயரும் என்றும் கூறப்படுகிறது.
திருப்பதியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. இலவசமான சர்வ தரிசனம் , 300 ரூபாய் முன்பதிவுடன் சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம், மலையேறி வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், முன்பதிவு செய்யாமல் நேரடியாகவும் தரிசனம் மேற்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக கொடுக்கப்படும். கூடுதலாக லட்டு தேவைப்பட்டால் ஒரு லட்டுக்கு ரூ.50 செலுத்த வேண்டும்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அக்டோபர் மாதத்திற்கான தரிசனம் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. அதனுடன் தங்குமிடத்திற்கான டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீடு அட்டவணையை வெளியிட்டுள்ளது. பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏழுமலையானை தரிசிக்கலாம்.
அக்டோபர் மாதத்திற்கான அர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த ஜூலை 19 அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. பக்தர்கள் நேற்று அதாவது ஜூலை 21 ஆம் தேதி முதல் காலை 10 மணி வரை எலக்ட்ரானிக் டிராவுக்காகப் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் குலுக்கல் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் ஜூலை 21 முதல் ஜூலை 23 மதியம் 12 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
அதேபோல் கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபஅலங்கார சேவை மற்றும் வருடாந்திர புஷ்பயாகம் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரிசன ஸ்லாட்கள் இன்று அதாவது ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். அதுமட்டுமின்றி அங்கபிரதட்சணம் டோக்கன்கள் நாளை அதாவது ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கபிரதட்சணம் டோக்கன்கள் நாளை அதாவது ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் கிடைக்கும். ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு இலவச தரிசன டோக்கன்கள் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.
ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் அதாவது ஜூலை 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகளுக்கான ஒதுக்கீடு நாளை மறுநாள் அதாவது ஜூலை 24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மேலும் படிக்க | Tirupati Tour: திருப்பதிக்கு சுற்றுலா..சிறப்பு தரிசனத்தோடு அசத்தலான டூர் பேக்கேஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









