Tirupati Darshan Ticket Update: திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையானை தரிசம் செய்து வருகின்றனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. குறிப்பாக, தேவஸ்தானம் ரூ.300 சிறப்பு தரிசனம் டிக்கெட் மூலம் பல லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி தரிசன டிக்கெட்
மேலும், சர்வ தரிசனம் மூலமும் திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கலாம். ஆனால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். அதே நேரத்தில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வருபவர்ளுக்கு ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டுகள் உள்ளன. இதன் மூலம், பக்தர்கள் குறைந்த நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க முடியும். பலருக்கும் ரூ.300 சிறப்பு தரிசனம் மட்டும் அதிகளவில் தெரியும். ஆனால், மூத்த குடிமக்கள், கைக் குழந்தையுடன் வருபவர்களுக்கு என பலவகையான டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, அதனை எப்படி முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வீடியோ வெளியிட்டு உள்ளது. எனவே, எப்படி அந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.
மூத்த குடிமக்கள் திருப்பதி தரிசன டிக்கெட் பெறுவது எப்படி?
மூத்த குடிமக்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பினால், உங்களுக்கான சிறப்பு தரிசனத்தை தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், நீங்கள் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். மேலும், மாற்றுத்திறனாளிகளும் இதன் மூலம் குறைந்த நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம். இதற்கு ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும். மேலும், நீங்கள் கைக்குழந்தையுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால், உங்களுக்கான சிறப்பு தரிசனத்தை தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தாய், தந்தை, குழந்தையுடன் குறைவான நேரத்திரத்தில் காத்திருந்து தரிசனம் செய்யலாம். ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் இந்த தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முதலில் ttdevasthanans.ap.gov.in என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். உங்களது மொபைல் எண், பெயர், இமெயில் ஐடி உள்ளிட்டவற்றை உள்ளிட்டு பாஸ்வோர்ட் செட் செய்து கொண்டு லாகின் செய்ய வேண்டும். முகப்பு பக்கதத்தில் Differently Abled/Senior Citizen Darshan என்ற ஆப்ஷன் இருக்கும். இதனை கிளிக் செய்து, தரிசனத்திற்கான நாளை தேர்வு செய்து, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளின் பெயர், ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இதன்பிறகு? தரிசனத்திற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதன் பிறகு, உங்களது டிக்கெட் அனுப்பப்படும்.
கைக்குழந்தைகளுக்கான சிறப்பு தரிசனம் டிக்கெட்
கைக்குழந்தைகளுடன் திருப்பதி வருபவர்கள் சுபதம் என்ட்ரி மூலம் டிக்கெட்டுகளை பெறலாம். இதற்கான நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவசியமில்லை. சுபதம் என்ட்ரியில் மதியம் 12 மணி மற்றும் மாலை 6 மணிக்கு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ், பெற்றோர்களுக்கான ஆதார் கார்டை வழங்கி, தரிசன டிக்கெட்டை பெறலாம். கைக்குழந்தைகளுடம் தரிசனம் மேற்கொள்பவர்கள் குழந்தைக்கான உணவுகள், டயப்பர், பால் பாட்டில் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், விரைவான தரிசனம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஸ்ரீவானி பாஸ் மூலம் செல்லலாம். இதற்காக ரூ.10,000 செலுத்த வேண்டும். ஸ்ரீவானி டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு விநியோகம் செய்யப்படும். இதன் மூலம், விரைவாக நீங்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
மேலும் படிக்க: வாட்ஸ் அப்பில் திருப்பதி தரிசன டிக்கெட் பெறுவது எப்படி? ரொம்ப ஈஸி.. முழு விவரம் இதோ
மேலும் படிக்க: ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! Whatsapp மூலம் சீட்டுக்கே வரும் சுடச்சுட உணவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









