)
Tirumala Tirupati June Darshan: ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் மணிக்கணக்கில் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி பக்தர்களுக்காக பல்வேறு தரிசனங்களையும் வழங்கி வருகிறது. ரூ.300 தரிசனம், விஐபி தரிசனம் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். மாதந்தோறும் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் ரூ.300 தரிசன டிக்கெட், விஐபி தரிசன டிக்கெட் வெளியீடு தேதி வெளியாகி உள்ளது.
திருப்பதிக்கு ஆகஸ்ட் மாதம் செல்பவர்கள் இந்த தேதிகளை நோட் செய்து கொள்ளுங்கள். அதன்படி, ஸ்ரீவானி விஐபி தரிசன டிக்கெட்டுகள் மே 23ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மே 23ஆம் தேதி 11 மணியளவில் ரூ.10,500 செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெறலாம். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மே 25ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு வெளியிடப்படும். மே 25ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியாகும். மேலும், தங்குமிடத்திற்கான டிக்கெட்டுளை மே 25ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மேலும், அர்ஜித் சேவை டிக்கெட்டுகளான சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனை, அஷ்டதள பாதபத்மாராரதனை சேவை டிக்கெட்டுகள் வரும் மே 18ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான எலக்ட்ரானிக் டிப் முறை மே 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மே 20 முதல் மே 22ஆம் தேதி மதியம் 12 மணி வரை கட்டண செலுத்துபவர்களுக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் டிக்கெட் மே 21ஆம் தேத காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி மற்றும் திருப்பதியில் தங்கும் வசதிக்கான கோட்டா மே 25ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) முதலில் ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் அல்லது செயலிக்குள் முதலில் செல்ல வேண்டும்.
2) உங்கள் கைபேசி எண் மற்றும் ஒடிபி எண்ணை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
3) பிறகு, முகப்பு பக்கத்தில் special entry darshan என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4) பிறகு, நீங்கள் தரிசனம் செய்வதற்கான தேதி, நேரத்தை தேர்ந்தெடுத்து, எத்தனை பேர் தரிசனம் செய்கிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5) பிறகு, பக்தர்களின் ஆதார் எண், பெயர், வயது, பாலினம் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
6) இதன்பிறகு, யுபிஐ, நெட் பேக்கிங், கிரெடிட், டெபிட் கார்டு மூலம் தரிசனத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
7) பிறகு, உங்கள் தரிசன டிக்கெட் உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
1. முதலில் ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
2. முகப்பு பக்கத்தில் srivani trust donation என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. பிறகு, எத்தனை பேர் தரிசனம் செய்கிறீர்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. நன்கொடைக்கு பிறகு donar privileges மூலம் விஐபி பிரேக் தரிசன ஸ்லாட் மற்றும் தேதியை தேர்ந்தெடுக்கவும்
5. மேலும், ஸ்ரீவானி தரிசனத்திற்காக கட்டணமாக ரூ.10,500 கட்டணமாக செலுத்த வேண்டும்
6. ஒரு மொபைல் எண்ணிற்கு அதிகபட்ச 9 டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம்