அழகான பெண்கள் இருக்கும் நாடுகள்! டாப்புல எந்த நாடு தெரியுமா? அப்போ இந்தியா?

Top Countries With The Most Beautiful Women:  உலகில் அழகான பெண்கள் வாழும் நாடுகள் குறித்த  பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.   

Written by - Umabarkavi K | Last Updated : Dec 2, 2025, 04:08 PM IST
  • அழகான பெண்கள் இருக்கும் டாப் நாடுகள்
  • இந்தியா எந்த இடத்தில் இருக்கு?
  • வெளியான பட்டியல்
அழகான பெண்கள் இருக்கும் நாடுகள்! டாப்புல எந்த நாடு தெரியுமா? அப்போ இந்தியா?

Top Countries With The Most Beautiful Women: உலக மக்கள் தொகையில் பாதிக்கு பாதி இருப்பவர்கள் பெண்கள். பெண்களுக்கு என தனித்த பண்புகள் இருக்கின்றன. பல நேரங்களில் ஆண்களை விட, திறமைசாளிகளாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும்  பெண்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில், ஆண்களை விட பெண்கள் நேர்த்தியாக காண்பித்து கொள்கிறார்கள். இப்படியாக பெண்கள் இருக்கும் நிலையில், உலகில் அழகான பெண்கள் வாழும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

அழகான பெண்கள் இருக்கும் டாப் நாடுகள்

உலகிலேயே மிக அழகான பெண்கள் எந்த நாட்டில் உள்ளனர் என்பதைக் கண்டறிய ஒரு கட்ஸ்ஸ்டோரி என்ற அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது.  இந்த ஆய்வின்படி, உலகின் அழகான பெண்கள் இருக்கும் நாடுகளில் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நெதர்லாந்து.  ஐரோப்பில் அமைந்துள்ள நெர்தர்லாந்து டச்சு பெண்கள் அழகான பெண்கள் என கூறப்பட்டுள்ளது.  அங்கிருக்கு வானிலை சூழல் போன்ற காரணங்களால் அவர்கள் அழகான பெண்கள் சொல்லப்படுகிறது.

இரண்டாம் இடத்தில் இருப்பது ரஷ்யா. ரஷ்யாவில் உள்ள பெண்கள்  தைரியமானர்கள் மற்றும் நேர்த்தியானவர்களாம்.  அவர்கள் தங்களை நேர்த்தியாக காண்பிடித்து கொள்வார்கள். அவர்கள் புத்திசாலித்தனத்திற்கும் பெயர் பெற்றவர்களாம்.  மூன்றாம் இடத்தில் இருப்பது வெனிசுலா. மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும் பல முறை வென்ற தான் வெனிசுலா. அந்த நாடு அழகான பெண்களால் நிரம்பியுள்ளது. ஏனென்றால் அவர்களிடம் கூர்மையான முக அமைப்புகளும் நீண்ட கூந்தலும் இருப்பதால் அவர்கள் அழகாக இருக்கிறார்கள். 

நான்காவது இடத்தில் இருப்பது இத்தாலி. இத்தாலியில் உள்ள பெண்கள் தங்களை அழகாக ஸ்டைல் செய்து கொள்வார்களாம். இதனால், உலகின் அழகான பெண்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.  ஐந்தாவது இடத்தில் இருப்பது தென்னாப்பிரிக்கா.   ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும், ஆறாவது இடத்தில் உக்ரைனும் உள்ளது.  உக்ரைன் பெண்கள் கவர்ச்சிகரமானவர்கள். அவர்களுக்கு சிறந்த முக அம்சங்கள் உள்ளன. 

மிக முக்கியமாக, அவர்களின் கண்கள் பலரையும் ஈர்க்குமாம். அதனால்தான் அது ஐரோப்பாவில் அழகான பெண்களை கொண்ட நாடாக உக்ரைன் உள்ளது.  7வது இடததில் இருப்பது தென் கொரியா. கொரியா நாட்டைச் சேர்ந்த பெண்கள் எப்போது தங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல நடைமுறைகளை பின்பற்றுவார்கள். இதற்காக அதிக செலவுகளும் அவர்கள் மேற்கொள்வார்கள்.  8,9வது இடத்தில் டென்மார்க், கொலம்பியா உள்ளது. 

இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகில் அழகான பெண்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள் இருப்பதால் பல பெண்கள் அங்கு அழகாக இருக்கிறார்களாம். இந்தியப் பெண்கள் அற்புதமான முக அம்சங்களைக் கொண்டவர்கள் என்று கூறுகிறார்கள். மேலும், கருமையான தோல் நிறம், நீண்ட கூந்தல், அழகான கண்கள் அவர்களது அசாதாரண அழகை மேலும் காட்டுகிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக மெக்சிகோ, ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, துருக்கி, போலாந்து, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அழகாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிகம் மது குடிக்கும் நாடுகள்! இந்தியர்களுக்கு எந்த இடம்? லிஸ்ட் பெருசா இருக்கே

மேலும் படிக்க: முட்டை vs பன்னீர்! இரண்டில் அதிக புரோட்டின் எதில் உள்ளது? முழு விவரம்!

 

About the Author

Trending News