Top 10 Oldest Countries In The World : உலகில், பல நூறு நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் பல, மிகவும் பழமையானவை ஆகும். அவற்றின் லிஸ்டை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Top 10 Oldest Countries In The World : உலகில் இருக்கும் பல நாடுகள், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கலாச்சாரம், வரலாறு மற்றும் பண்பாட்டை கொண்டவையாக இருக்கின்றன. தற்போது உலக வரைபடத்தில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் சிலதான் அப்படி நிறைய வரலாற்றை கொண்ட நாடுகளாக உள்ளன. அப்படிப்பட்ட நாடுகளில், சில மட்டும்தான் இன்னும் தங்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து வருகின்றன. அப்படி, உலகில் பழமையான நாடுகள் எவை தெரியுமா?
1.எகிப்து:
எகிப்து நாட்டை ஆங்கிலத்தில் (Egypt) என்று கூறுவர். உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில், எகிப்து நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. நைல் நதிக்கரையில் தோன்றிய இந்த நகரின் நாகரிகம், பின்பு பிரமிடுகள் மற்றும் அந்த இடத்தில் வாழும் மக்களின் பிரத்யேக வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றதாக இருந்தது. இந்த நாட்டின் மன்னர் மெனெஸ், நாட்டை ஒன்றிணைத்து வாழ்ந்தார் என்று சில வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
2.இந்தியா:
இந்த லிஸ்டில், இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலக நாடுகளில், இந்தியாதான் இரண்டாவது மிக பழமையான நாடாக நம்பப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடங்கிய இந்த இந்தியாவின் பாரம்பரியம், வேத காலம் வரை வளர்ந்திருக்கிறது. இந்தியா, பண்டைய காலத்திலிருந்து இப்போது வரை அறிவியல், கலாச்சாரம், ஆன்மீகம் உள்ளிட்ட பல துறைகளில், பிற உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, உலக பொதுமறை நூலாக இருக்கும் தமிழ் திருக்குறள், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அனைவராலும் படிக்கப்படுகிறது என்பது மிகவும் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.
3.சீனா:
உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில், சீனா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டின் வரலாறு, Xia Dynasty எனப்படும், சியா வம்சத்துடன் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நாடு, சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. இங்கிருக்கும் சீன பெருஞ்சுவர், சுமார் 1911ல் கட்டப்பட்டது. 1970களில் தெங்சியாவோபிங் கொண்டு வந்திருந்த பொருளாதார சீர்திருத்தங்கள், சீனா உலகளாவிய வல்லரசாக உயர்வதற்கு வழிவகுத்தன.
4.ஈரான்:
ஈரான் நாடு, கி.மு.7ஆம் நூற்றாண்டு முதல் நீண்ட வரலாறு கொண்ட மேற்கு ஆசிய நாடாக இருக்கிறது. இந்த நாடு, அகாமனிசிய பேரரசு முதல் சபாவிய வம்சம் வரை பல்வேறு பேரரசுகளால் ஆளப்பட்டது. 1979ல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின்பு, இது ஒரு முக்கியமான இஸ்லாமிய குடியரசாக மாறியிருக்கிறது.
5.கிரீஸ்:
கிரீக்க வரலாறு என்பதை தெரிந்து கொள்ள கி.மு.300க்கு முந்தைய காலத்திற்கு செல்ல வேண்டும். இந்த நாடு, ஐரோப்பிய நாகரிகத்தின் தொட்டிலாக பார்க்கப்படுகிறது. ஏதேன்ஸ் ஜனநாயகத்தின் பிறப்பிடமான இது, ஸ்பார்ட்டாவின் ராணுவ வலிமை, அலெக்சாண்டரின் படையெடுப்புகள் உள்ளிட்ட பல வரலாறுகளை கொண்டதாக இருக்கிறது. பின்பு, 1832ல் சுதந்திர கிரேக்க ராஜ்ஜியமாக இந்த நாடு உருவானது.
6.எத்தியோப்பியா:
எத்தியோப்பியா, ஆப்ரிக்காவின் மிகப்பழமையான மற்றும் ஐரோப்பியர்களால் காலனித்துவப்படுத்தப்படாத ஒரே நாடாக இருக்கிறது. இந்த நாடு, முதலில் அபிசீனியா என அழைக்கப்பட்டு வந்தது. இந்த நாடு, 1974 வரை மன்னராட்சி வரலாற்றை கொண்ட நாடாக இருந்தது. 1974ல் ராணுவ புரட்சிக்கு பின்பு, குடியரசாக மாறிய இந்த நாடு 80க்கும் மேற்பட்ட இனக்குழுக்களை கொண்ட பன்முகத்தன்மை மிக்க நாடாக இருக்கிறது.
7.ஜார்ஜியா:
ஜார்ஜியா என்பது, கருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் பழமையான கலாச்சார நாடுகளுள் ஒன்றாகும். இங்கு ஒயின் தயாரிப்பு ரொம்பவே புகழ் பெற்றது. இது, ஐபீரியா மற்றும் கொல்கிஸ் போன்ற பண்டைய ராஜ்ஜியங்களின் தாயகமாக இருக்கிறது. இந்த நாடு, 1991ல் சோவியத் யூனியனில் இருண்டு பிரிந்து சுதந்திரமடைந்தது.
8.ஜப்பான்:
ஜப்பான் வரலாற்றை தெரிந்து கொள்ள, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கி போக வேண்டும். இந்த நாட்டில் அத்தனை ஆண்டுகால கலாச்சாரம் மற்றும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய வியக்கத்தக்க பொருளாதார வளர்சியானது இந்த நாட்டின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
9.அர்மீனியா:
அர்மீனியா, மேற்கு ஆசியாவின் மேட்டு நிலங்களில் அமைந்திருக்கும் உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது, உலகிலேயே கிறிஸ்தவ மதத்தை அரசு மதமாக ஏற்றுக்கொண்ட முதல் நாடாகும்.
10.சான் மரினோ:
சான் மரினோ, ஐரோப்பாவில் இருக்கும் இத்தாலியால் சூழப்பட்ட ஒரு மிகச்சிரிய சுதந்திர நாடாக இருக்கிறது. இது தோன்றியது கி.பி.301 ஆகும். இது ஐரோப்பிய நாடாக இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ