Top 10 Safest Country For Women : பெண்களின் பாதுகாப்பு என்பது கடந்த சில நாட்களாகவே, கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இதை எடுத்து சமீபத்தில் Numbeo நடத்திய ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பத்து நாடுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டாப் 10 லிஸ்டில் இந்தியாவிற்கு இடமே இல்லை என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
முதல் இடத்தில் இருக்கும் நாடு..
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது, அண்டோரா என்னும் நாடாகும். இந்த நாட்டில் நடக்கும் கிரைம் ரேட்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்வும் அமைதியாக செல்கிறது. இங்கு சுற்றுலா பயணிகளாக வருபவர்களும், இந்த நாட்டிலேயே வாழ்பவர்களும் அமைதியான சூழல் வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
இந்த நாட்டில் பெண்களுக்கு என பல சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கிருக்கும் மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் என அனைத்திலும் பெண்களுக்கும் முன்னுரிமை. இது போன்ற பாசிட்டிவான சூழல் அமைவதால், இருக்கும் மக்கள் சகஜமாக வாழ்கின்றனர்.
இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு:
இந்த லிஸ்டில் இரண்டாம் இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) நாடு இருக்கிறது. இங்கு பெண்களுக்கு எதிராக ஏதேனும் குற்ற செயல்களை ஈடுபட்டால், அவர்களுக்கு கடுந்தண்டனை வழங்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சட்டங்கள் நாளுக்கு நாள் இன்னும் கடுமையாக்கப்படுவதால் இந்த பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அனைத்தும் குறைவாக இருக்கும். இங்கு ஒரு பெண்ணை தவறாக பார்த்தாலும், குற்றமாக கருதப்படுகிறது. இதற்கு ஏற்ற தண்டனைகளும் அதிகம். இதனால் இங்கிருக்கும் பெண்கள் இரவில் எவ்வளவு தாமதமானாலும் பயப்படுவதில்லை.
மூன்றாவது இடத்தில் கதாரும், 4வது இடத்தில் தாய்வானும், 5வது இடத்தில் ஓமன் நாடும் இருக்கிறது. 6வது இடத்தில் ஐல் ஆஃப் மேன், 7வது இடத்தில் சீனாவின் ஹாங் காங், 8வது இடத்தில் அர்மேனியா, 9வது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் 10வது இடத்தில் ஜப்பான் ஆகிய நாடுகளும் உள்ளன.
இந்தியாவிற்கு எந்த இடம்?
இந்தியாவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பான டாப் 10 நாடுகளில் இடமில்லை என்பது ஆச்சரியப்படும் விஷயம் ஒன்றும் இல்லை. இந்த பெண்களுக்கு எதிராக நடக்கப்படும் குற்றங்களுக்கு தண்டனைகள் தீர விசாரித்த பிறகுதான் வழங்கப்படுகின்றன. அதிலும், பலர் இது குறித்து விசாரணை நடக்கும் போதே எப்படியாவது சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். இந்தியாவிற்கு வந்து சுற்றிப் பார்க்க நினைத்த சுற்றுலா பயணிகளும் பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட செய்திகளும் தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்தியாவிற்கு இந்த லிஸ்டில், 66வாது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக 65 வது இடத்தில் பாகிஸ்தானும், அமெரிக்கா 89வது இடத்திலும் இருக்கிறது.
கடைசி இடங்களில் இருக்கும் நாடுகள்:
லிஸ்டில் கடைசியாக இருக்கும் நாடுகளில், பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. 144வது இடத்தில் ஆஃப்கானிஸ்தானும், 145வது இடத்தில் ஹைதி, 146வது இடத்தில் பாபுவா நியூ ஜினியா மற்றும் 147வது இடத்தில் வெனிசுலா ஆகிய நாடுகளும் உள்ளன. இவற்றுடன் நைஜீரியா, பெரு, ஜமைகா, சிரியா ஆகிய நாடுகளும் இருக்கின்றன. இந்த நாடுகளில் பெண்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க | ஷ்ஷ்..‘இந்த’ 7 விஷயத்தை எப்போதும் ரகசியமா வெச்சுக்கணும்! இல்லன்னா பிரச்சனை வரும்..
மேலும் படிக்க | தண்ணீர் பாட்டிலை தினமும் கழுவலாமா? அப்படி செய்தால் உடலுக்கு என்ன ஆகும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









