)
Top 10 States In India That Has Highest IQ : உலக நாடுகளில், மக்கள் தொகை நிறைந்த நாடாகவும், வணிக வளம் மிக்க நாடாகவும் விளங்குகிறது இந்தியா. நம் நாட்டில் மொத்தம் 140 கோடிக்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். நம் நாட்டில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன. பல மொழி பேசும் மக்கள், பல மதங்கள், என பல்வேறு விஷயங்கள் இருந்த போதிலும், நம் நாடு ஒற்றுமையுடன் பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. இந்த நாட்டில், அதிக புத்திசாலிகள் நிறைந்த மாநிலங்கள் எவை என்பதற்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
இந்த பட்டியலானது, இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக IQ இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
10.குஜராத்:
இந்த பத்து மாநிலங்களில், குஜராத் கடைசி இடத்தில் இருக்கிறது. இங்கிருப்பவர்களின் அறிவாற்றல், சராசரியாக IQ 97 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அங்கு நடந்த வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வு அவர்களின் புத்திசாலித்தனத்தை வளர்த்து வருகிறது.
9.சண்டிகர்:
இந்த மாநிலத்தில் இருப்பவர்களின் IQ அளவு தோராயமாக 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் சிறிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
8.பீகார்:
பீகாரில் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியறிவும் எழுத்தறிவும் மேம்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்களின் IQ சராசரியாக 98 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இங்கு இருக்கும் பலருக்கு பொருளாதார அமைப்பு காரணமாக கல்வி அறிவானது கிடைக்காமல் இருக்கிறது.
7.பஞ்சாப்:
பஞ்சாபில் இருப்பவர்களின் IQ சராசரியாக 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிருக்கும் பள்ளிகள் அரசு மற்றும் தனியாரை சேர்ந்ததாக இருக்கின்றன. இங்கு பல்வேறு அறிவு சார் நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
6.உத்திரபிரதேசம்:
இந்தியாவில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கிறது உத்தர பிரதேசம். இங்கிருக்கும் மக்களின் IQவானது, 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கிராமப்புறம் நகர்ப்புறம் என்று இரு பகுதிகளின் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களை விட கிராமபுரத்தில் இருப்பவர்களுக்கு கல்வி அறிவு கிடைப்பது கடினமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5. கர்நாடகா:
இந்தியாவின் டெக் நகரங்கள் அதிகம் கொண்ட மாநிலமாக இருக்கிறது கர்நாடகா. உங்க இது குறித்து ஆராய்ச்சிகளும் பல்வேறு மையங்களில் நடைபெற்ற வருகின்றன. எங்கிருப்பவர்களின் சராசரியான IQவானது 102-103 ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
4. மகாராஷ்டிரா:
இந்தியாவிற்கு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கும் ஒரு மாநிலமாக இருக்கிறது மகாராஷ்டிரா. இங்கிருக்கும் மக்களின் IQ 102-104 ஆக இருக்கிறது. இதில் குறிப்பாக மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் இருக்கும் மக்கள், கல்வி அறிவில் சிறந்து விளங்குவதால் இவர்களின் அறிவாற்றலும் மேம்படுகிறது.
3. தமிழ்நாடு:
மத்திய அரசு வைக்கும் போட்டி தேர்வுகள் மற்றும் மாநில தேர்வுகள் ஆமாணவர்கள் தமிழக மாணவர்கள், சிறப்பாக செயல்படுவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதை வைத்து பார்க்கும் போது நம் மாநில மக்களின் IQ, 103-106 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நம் மாநில மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்தும் பாடமாக இருப்பது கணிதம் மற்றும் அறிவியலாகும். அதேபோல தமிழ்நாடு, அதிக பயிற்சி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
2.டெல்லி:
இந்தியாவின் தலைநகர் டெல்லி, அதிக IQ திறன் கொண்டவர்கள் வசிக்கும் இரண்டாவது மாநிலமாக இருக்கிறது. இங்கு கணக்கிடப்பட்ட சராசரி மதிப்பீட்டின்படி, மக்களின் IQ 106-109 ஆக இருக்கிறது. இங்கு பயிற்சி படிப்புகளையும், கல்வியறிவையும் எளிதாக அணுக முடியும் என கூறப்படுகிறது. அதே போல இங்க இருக்கும் மாணவர்கள் CBSE தேர்வில் நன்கு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்கின்றனர்.
1. கேரளா:
இந்திய மாநிலங்களில் உயர்ந்த கல்வி அறிவு மற்றும் அறிவாற்றல்மிக்க மக்களை கொண்ட மாநிலமாக இருக்கிறது கேரளா. இங்கு இருப்பவர்களின் சராசரி IQ 110-112 ஆக இருக்கிறது. இங்கு பள்ளிப்படிப்பு மற்றும் உயர்கல்வி அறிவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ