)
Marriage Secrets You Should Never Share : பல கலாச்சாரங்களில், திருமணம் என்பது இருவருக்கும் இடையேயான பந்தம் என்பதை தாண்டி இரு உறவுகளை உருவாக்கும் புது பந்தம் என்று கூறப்படுகிறது. காதல், அன்பு, நட்பு, நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் உருவாகும் இந்த உறவானது நெடுங்காலம் வர வேண்டும் என்பது அனைவரது ஆசை. அனைவருக்கும் அப்படி நிகழ்வதில்லை. இது குறித்து பேசும் மனநல ஆலோசகர்கள், திருமண உறவில் இருக்கும் 6 ரகசியங்களை வேறு யாரிடமும் பகிரக்கூடாது என்று கூறுகின்றனர்.
பார்ட்னரின் பலவீனங்கள்:
அனைவரிடமும் ஒரு குறை இருக்கும். ஆனால் உங்கள் பார்ட்னரை பற்றிய பயன்கள் மற்றும் பலவீனங்களை வெளியில் கூறும் போது அது உங்கள் பார்ட்னரை முதுகில் குத்தியது போல இருக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் கூறிய இந்த விஷயங்களை வெளியில் சொல்லக்கூடாது. இப்படி செய்வதால் நம்பிக்கை உடைந்து போக வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து பேசும் மனநல ஆலோசகர்கள், உணர்ச்சி பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை மீறல் என்கின்றனர்.
சண்டைகள்:
உங்கள் பார்ட்னர் உடன் ஏற்படும் சண்டைகள் குறித்து வெளியில் கூறுவதால் உங்களுக்கு ஏதோ ஒரு நிம்மதி கிடைப்பது போல் இருக்கும். ஆனால் இது பிரச்சனையும் முடியவும் வாய்ப்பிருக்கிறது. உங்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் இது போன்ற சண்டைகளை கூறும் போது நீங்கள் மன்னித்தாலும் அவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனால் பல சமயங்களில் உறவு உடைய வாய்ப்புள்ளது.
உங்கள் பார்ட்னரின் நிதி நிலைமை:
பணம் என்பது பல திருமண உறவுகளில், முக்கிய பிரச்சினையாக இருக்கலாம். உங்கள் பார்ட்னரின் வருமானம், கடன் மற்றும் செலவு செய்யும் முறை ஆகியவற்றை வெளியில் கூறும் போதும் அவர்களுக்கு அது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தலாம். நிதி மேலாண்மை என்பது கணவன் மனைவிக்கு மட்டும் தெரிய வேண்டிய ஒரு விஷயம்.
படுக்கையறை விஷயங்கள்:
திருமண உறவில் படுக்கை அறையில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும். இவற்றை வேறு யாரிடம் ஆவது நகைச்சுவையாக பகிர்ந்தாலும் அது சம்பந்தப்பட்ட இன்னொரு நபரை காயப்படுத்த இயலும். இது ஒரு வகையில் கிசுகிசுக்களையும் பரப்பலாம். எனவே, ஒருவருக்கொருவர் அவர்களுக்கும் இருக்கும் பிரைவசிக்கு மரியாதை கொடுப்பது நல்லது.
ரகசியங்கள்:
நம்பிக்கையின் அடிப்படையில், உங்களது பார்ட்னர் சில விஷயங்களை உங்களிடம் தெரிவித்து இருப்பார். அது அவர்களின் கடந்த காலத்தை பற்றியதாக, குடும்பம் குறித்த அந்தது ஆரோக்கியம் குறித்தவையாக இருக்கலாம். அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதை நிரூபிக்கும் வகையில் இதை தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், நீங்கள் அதை வெளியில் சொல்லும் போது அந்த நம்பிக்கையும் உடைந்து விடும், உறவும் உடைந்து விடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ