குறைந்த செலவில் வெளிநாடு டூர் போகலாம்... மிக அழகான சில இடங்களுக்கு ஆகும் செலவு விபரம்

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். ஆனால், சர்வதேச பயணத்தைத் திட்டமிடும்போது ஏற்படும் தயக்கத்திற்கான மிகப்பெரிய காரணம் பட்ஜெட்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 14, 2025, 12:33 PM IST
  • அழகான கடற்கரைகள் முதல் வளமான கலாச்சாரம் வரை, தாய்லாந்து ஒரு பெரிய சுற்றுலா தலமாகும்.
  • இந்திய பயணிகள் குறைந்த பட்ஜெட்டில் செல்ல இலங்கை ஒரு சிறந்த தேர்வாகும்.
  • IRCTC வலைத்தளம் வழியாக சுற்றுலா பேகேஜ்களை முன்பதிவு செய்யலாம்.
குறைந்த செலவில் வெளிநாடு டூர் போகலாம்... மிக அழகான சில இடங்களுக்கு ஆகும் செலவு விபரம்

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். ஆனால், சர்வதேச பயணத்தைத் திட்டமிடும்போது ஏற்படும் தயக்கத்திற்கான மிகப்பெரிய காரணம் பட்ஜெட் தான். லட்சக்கணக்கில் செல்வாகும் என்பதால், பயணத்தை மேற்கொள்ளும் எண்ணத்தை கைவிடும் பலரைக் காணலாம். எனினும், ரூ. 50,000 பட்ஜெட்டில் செல்லக் அழகிய பல சுற்றுலா  இடங்கள் உள்ளன.

Add Zee News as a Preferred Source

குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய,  IRCTC பல சிறந்த மலிவான பேக்கேஜ்களை வழங்குகிறது. IRCTC வலைத்தளம் வழியாகவும் சுற்றுலா பேகேஜ்களை முன்பதிவு செய்யலாம். அந்த வகையில், இந்தியாவில் இருந்து குறைந்த பட்ஜெட்டில் நீங்கள் பயணிக்கக்கூடிய சில சிறந்த நாடுகள் குறித்த விபரங்களை இங்கே காணலாம்.

இலங்கை 

பசுமையான மலைகள், வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள், அமைதியான கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகள் ஆகியவை இலங்கையின் அழகிய தீவு நாட்டின் அடையாளமாகும். இந்திய பயணிகள் குறைந்த பட்ஜெட்டில் ஆராய்வதற்கு இலங்கை ஒரு சிறந்த தேர்வாகும். இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து இலங்கைக்கு 1.5 முதல் 2.5 மணி நேர விமானப் பயணம் மூலம் எளிதாகப் பயணிக்க முடியும். உங்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தால், எந்த பதற்றமும் இல்லாமல் எளிதாக இ-விசாவைப் பெறலாம்.

இலங்கை பயணம் 5-6 நாட்களுக்கு தோராயமான பட்ஜெட்

இலங்கை சென்று திரும்புவதற்கான விமானம் டிக்கெட்  ரூ.15,000 – ரூ.20,000
விசா கட்டணம் - ரூ.1,600 – ரூ.1,800
ஹோட்டல்கள் (பட்ஜெட் ஹோட்டல்கள்) ரூ.6,000 – ரூ.10,000
உணவு ரூ.2,500 – ரூ.4,000
உள்ளூர் போக்குவரத்து செலவு -  ரூ.3,000 – ரூ.6,000
நுழைவுச் சீட்டுகள் ரூ.2,000 – ரூ.3,000
மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ.30,000 – ரூ.45,000

வியட்நாம்

இந்தியாவிலிருந்து வரும் பட்ஜெட் சுற்றுலாப் பயணிகளுக்கு வியட்நாம் ஒரு சிறந்த பயணத் தலமாகும். இந்திய சுற்றுலாப் பயணிகள் இங்கு இயற்கை அழகு, வளமான வரலாறு, அற்புதமான கடற்கரைகள் மற்றும் சுவையான தெரு உணவுகளை அனுபவிக்க முடியும். இந்திய குடிமக்கள் https://evisa.xuatnhapcanh.gov.vn என்ற இணையதளத்தில் வியட்நாமிற்கான இ-விசாவை எளிதாகப் பெறலாம். 50,000 ரூபாய்க்குள் ஒரு அற்புதமான சர்வதேச பயணத்தை மேற்கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், வியட்நாம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

வியட்நாம் பயணம் 5-6 நாட்களுக்கு தோராயமான பட்ஜெட்

விமான பயண செலவு ரூ.20,000 – ரூ.25,000
ஹோட்டல்கள் (பட்ஜெட்/விடுதி) - ரூ.6,000 – ரூ.10,000
உணவு மற்றும் போக்குவரத்து - ரூ.5,000 – ரூ.7,000
நுழைவு/சுற்றுலா/பயணக் கட்டணம் - ரூ.4,000 – ரூ.6,000
விசா கட்டணம் ரூ.2,000
மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ.35,000 – ரூ.50,000

தாய்லாந்து

அழகான கடற்கரைகள் முதல் வளமான கலாச்சாரம் வரை, தாய்லாந்திற்கு பயணம் செய்வது ஒரு பெரிய சுற்றுலா தலமாகும். தாய்லாந்து ஒரு பட்ஜெட்டுக்கு ஏற்ற பயண இடமாகக் கருதப்படுகிறது., அங்கு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா ஆன் அரைவல் வசதி கிடைக்கிறது. பாங்காக் விமான நிலையத்தில் படிவம், புகைப்படம் மற்றும் கட்டணத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் 15 நாட்களுக்கு இ-விசாவை எளிதாகப் பெறலாம்.

தாய்லாந்து பயணம் 5-6 நாட்களுக்கு தோராயமான பட்ஜெட்

விமானம் பயண கட்டணம் - ரூ.15,000–ரூ.25,000
ஹோட்டல் (5 இரவுகள்) - ரூ.5,000–ரூ.8,000
உணவு (தெரு உணவு/உணவகங்கள்) -  ரூ.2,500–ரூ.3,500
உள்ளூர் போக்குவரத்து/சுற்றுலா - ரூ.2,000–ரூ.4,000
வருகையின் போது விசா ரூ.2,000 (தோராயமாக 2000 THB)
சிம் கார்டு + பிற செலவுகள் - ரூ.500–ரூ.1,000
பட்ஜெட் பயணம் ரூ.27,000 – ரூ.40,000

பூட்டான் 

இயற்கை அழகு நிறைந்த கலாச்சார ரீதியாக வளமான நாடான பூட்டானுக்கு ஒரு பயணம், உங்கள் விருப்பப் பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும். இந்திய பயணிகளுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற சர்வதேச பயண இடங்களில் பூட்டானும் ஒன்றாகும். பூட்டானுக்குச் செல்வதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இந்திய குடிமக்களுக்கு இங்கு விசா தேவையில்லை; வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் மூலம் இந்த நாட்டிற்கு செல்லலாம்.

பூட்டான் பயணம் 5-6 நாட்களுக்கு தோராயமான பட்ஜெட்

பூட்டானுக்கு மேற்வங்க எல்லையிலிருந்து சாலை வழியாக பயணிக்கலாம்

ஜெய்கானுக்கு ரயில்/பேருந்து மூலம் சென்று வர ரூ.2,000–ரூ.3,000

ஹோட்டல்கள் (5 இரவுகள் - பட்ஜெட் ஹோட்டல்கள்) ரூ.4,000–ரூ.6,000

உள்ளூர் போக்குவரத்து/டாக்ஸி பகிர்வு ரூ.4,000–ரூ.6,000

உணவு (உள்ளூர் உணவகம்/தெரு உணவு) ரூ.2,000–ரூ.3,000

நுழைவுச் சீட்டு மற்றும் அனுமதி ரூ.500–ரூ.1000

மொத்தம் (சாலைப் பயணம்) ரூ.15,000 – ரூ.25,000

குறிப்பு: நீங்கள் விமானம் மூலம் பூட்டானுக்குச் செல்ல திட்டமிட்டால், 5 முதல் 6 நாட்களுக்கு மதிப்பிடப்பட்ட செலவு ரூ.45,000 – ரூ.50,000 வரை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.

நேபாளம்

இந்தியாவின் அண்டை நாடுகளில் மிகவும் விரும்பப்படும் பயண இடங்களின் பட்டியலில் நேபாளம் முதலிடத்தில் உள்ளது. உங்கள் நேபாளப் பயணத்தில் இயற்கை அழகு மற்றும் ஆன்மீகத்தின் தனித்துவமான சங்கமத்தைக் காண்பீர்கள். இந்தியர்கள் நேபாளத்திற்குச் செல்ல விசா தேவையில்லை என்பதால், இந்தியாவிலிருந்து பயணிக்க நேபாளம் ஒரு மலிவான மற்றும் மிகவும் பாதுகாப்பான இடமாகும். நேபாளத்திற்கு 3 முதல் 4 நாள் பயணத்தை நீங்கள் எளிதாக திட்டமிடலாம். இதற்காக ஆகும் செலவு ரூ.25,000 மட்டுமே.

பட்ஜெட் பயண மதிப்பீடு (3–5 நாட்கள்)

போக்குவரத்து செலவு - ரூ.5,000 – ரூ.10,000
ஹோட்டல்/ஹோம்ஸ்டே ரூ.800 – ரூ.1,500/இரவு
உணவு மற்றும் உள்ளூர் பயணம் ரூ.300 – ரூ.600/நாள்
டிக்கெட்டுகள்/நுழைவு கட்டணம் ரூ.500 – ரூ.1,000
மொத்த செலவுகள் (சராசரி) ரூ.12,000 – ரூ.20,000

குறிப்பு: நீங்கள் சாலை மார்க்கமாக அல்லாமல் விமானம் மூலம் நேபாளத்திற்கு பயணிக்க திட்டமிட்டால், 5 முதல் 6 நாட்களுக்கு மதிப்பிடப்பட்ட செலவு ரூ.35,000 - ரூ.450,000 ஐ எட்டும் வாய்ப்பு அதிகம். நீங்கள் ரூ.12,000 – ரூ.20,000 செலவிட வேண்டியிருக்கலாம்.

மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

மேலும் படிக்க | கோடை விடுமுறையில்... கேரளா டூர் செல்ல IRCTC வழங்கும் சிறந்த பேக்கேஜ் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News