Why Indians Cook Non Veg Only On Sundays : ஞாயிற்றுக்கிழமை ஆனாலே பலருக்கு பலவித எண்ணங்கள் மனதில் தோன்றும். அதில் குறிப்பாக இருக்கும் ஒன்று “அப்பாடா, இன்னிக்கி வீட்ல நான் வெஜ் சாப்பிடலாம்” என்பதுதான். காலையில் குளிக்கிறோமோ இல்லையோ, ஒரு கையில் பணம் இன்னொரு கையில் கூடையுடன் கரிக்கடைக்கோ மீன் கடைக்கோ சென்று விடுவோம். இந்தியாவின் பல இல்லங்களிலும், (குறிப்பாக நடுத்தர வர்க்கத்தில்) இதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? ஞாயிறுகளில் மட்டும் பெரும்பாலான இல்லங்களில் அசைவ உணவுகளை செய்வது ஏன்? இங்கு அது குறித்து பார்ப்போம்.
பொருளாதார சூழல்:
காய்கறிகளுடன் ஒப்பிடுகையில் மீன், சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளின் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, பொருளாதார சூழலில் குறைந்த அளவில் இருக்கும் குடும்பங்கள், ஞாயிறுகளில் மட்டும் அசைவ உணவுகளை சாப்பிடும் பழக்கத்தினை கொண்டுள்ளது. அதே போல, ஒரு சிலருக்கு ஞாயிறுகளில் மட்டுமே விடுப்பு கிடைக்கும். இதனால், அந்த நாளில் மட்டும் அவர்கள் பொறுமையாக கடைக்கு சென்று நேரமெடுத்து அசைவ உணவை சமைப்பர்.
நடைமுறை சிக்கல்கள்:
ஒரு சிலருக்கு வேலைக்கு செல்லும் முன் காலையில் எழுந்து அசைவ உனவுகளை செய்ய நேரம் இருக்காது. இதனால் அவர்கள் பெரும்பாலும் ஞாயிறுகளிலும், விடுமுறை நாட்களிலும் மட்டும் அசைவம் செய்கின்றனர். அதே போல, சிலர் அசைவத்திற்கு தனியாக பாத்திரங்களையும், சைவத்திற்கு தனியாக பாத்திரங்களையும் வைத்திருப்பர். தினமும் இரண்டையும் எடுத்து உபயோகிப்பது கடினமாகிறது. இது போன்ற நடைமுறை சிக்கல்களாலும் ஞாயிறுகளில் சிக்கன்-மட்டன் செய்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
குடும்ப நடைமுறைகள்:
ஒரு சில குடும்பங்களில் தாத்தா-பாட்டி, அம்மா-அப்பா மற்றும் தாய்-தந்தை என அனைவருமே ஞாயிறுகளில் மட்டும் அசைவம் செய்து பழகியவர்களாக இருப்பர். இந்த பழக்கம் பல தலைமுறைகளுக்கும் கூட தொடரலாம். இது போன்ற பாரம்பரிய நடைமுறைகளாலும் கூட சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அசைவ உணவை சமைப்பர்.
ஆரோக்கியம்:
ஒரு சிலர், வாரத்தின் அனைத்து நாட்களிலும் லைட் ஆன டயட்டில் இருப்பவர்கள் அந்த நாட்களில் காய்கறிகளை மட்டும் எடுத்துக்கொள்பவர்களாக இருப்பர். ஞாயிற்றுக்கிழமையில் சிக்கன், மட்டன் அல்லது முட்டை மீன் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வர். ஒரு சில இந்திய கலாச்சாரங்களில், இது ஆயுர்வேத மருத்துவ முறையாக பார்க்கப்படுகிறது. இதனால், செரிமானம் மேம்படுவதுடன் உடல் ஆரோக்கியமும் பேலன்ஸாக இருக்கும் என கூறப்படுகிறது.
மத நம்பிக்கைகள்:
இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதில் சில பிரிவினை சேர்ந்தவர்கள், தங்களின் மத நம்பிக்கையின் படி திங்கள், வியாழன் மற்றும் பிற முக்கிய வார நாட்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஒரு சில இல்லங்களில், அசைவ உணவுகளை குறிப்பிட்ட நாட்களில் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என சிலர் கருதுகின்றனர். இது போன்ற நம்பிக்கைகளால், ஞாயிறுகளில் மட்டும் அசைவம் சாப்பிடம் பழக்கத்தினை பலர் வைத்துள்ளனர். ஒரு சில குறிப்பிட்ட கடவுள்களை கும்பிடுபவர்களின் நம்பிக்கை, ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வேறு எந்த நாட்களிலும் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதாக உள்ளது.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய மிருணாள் தாகூருக்கு உதவும் சிம்பிள் உணவு! நீங்க கூட செய்யலாம்..
மேலும் படிக்க | உள்ளங்கையில் தோல் உரிந்தால் வளர்கிறோம் என அர்த்தமா? உண்மை காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









