)
நாட்டின் வளர்ச்சிக்கும் சுற்றுலாத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு, சுற்றுலா பயணிகளால் உள்ளூர் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன. அந்த வகையில், தனது நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக வெளிநாட்டு பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய பயணிகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, இப்போது விசா பெறுவதில் சிரமம் இல்லாமல் 58 நாடுகளுக்கு இந்தியர்கள் பயணிக்க முடியும். ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு 2025 பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 81வது இடத்தைப் பிடித்திருந்தாலும், விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்கக் கூடிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பல நாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன. மற்றவை வருகையின் போது விசா அல்லது இ-விசா விருப்பங்களை வழங்குகின்றன.
சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த இடங்களின் பட்டியலில் தாய்லாந்து, இந்தோனேசியா, மொரீஷியஸ் மற்றும் மாலத்தீவுகள் ஆகியவை விசா தேவையில்லாத நாடுகளின் பட்டியலில் அடங்கும். இவை அனைத்தும் அவற்றின் அற்புதமான கடற்கரைகள், பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் அன்பான விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவை. கடற்கரையில் இளநீர் பருகுவதையோ அல்லது பவளப்பாறைகளை ஆராய்வதையோ கனவு காணும் பயணிகளுக்கு, இது ஒரு பொன்னான வாய்ப்பு.
பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற கலாச்சார ரீதியாக வளமான இடங்களும் இந்த பட்டியலில் அடங்கும். நீங்கள் இமயமலையில் மலையேற்றம் செய்தாலும், பழங்கால கோயில்களை கண்டு களிக்க, அல்லது உள்ளூர் உணவு வகைகளை ரசிக்க என், இந்த நாடுகள் மறக்க முடியாத அனுபவங்களை வழங்குகின்றன -ஆப்பிரிக்க நாடுகளும் இப்போது இந்திய பயணிகளுக்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. கென்யா, மடகாஸ்கர் மற்றும் ஜிம்பாப்வே போன்ற இடங்கள் இதில் அடங்கும்.
லாவோஸ், பிஜி மற்றும் வனுவாட்டு போன்ற அழகிய ரத்தினங்களாக விளங்கும் இடங்களும் இதில் அடங்கும். இந்த குறைவாக அறியப்பட்ட இடங்கள் என்பதலால் பயணிகளுக்கு கூட்டம் அதிக இல்லாமல், அழகிய இயற்கை நிலப்பரப்புகளை ஆராய சரியான வாய்ப்பை வழங்குகின்றன. அது தெளிவான, டர்க்கைஸ் நீரில் டைவிங் செய்யலாம், பசுமையான மழைக்காடுகள் வழியாக மலையேற்றம் செய்யலாம்.
இந்தியர்களுக்கு விசா விதிகளில் தளர்வுகள் அறிவித்துள்ள நாடுகளின் பட்டியல்
விசா விதிகளில் தளர்வு அறிவித்துள்ள நாடுகளின் பட்டியலில் அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், குக் தீவுகள், டிஜிபூட்டி, டொமினிகா, எத்தியோப்பியா, பிஜி, கிரெனடா, கினியா-பிசாவ், ஹைட்டி, இந்தோனேசியா, கினியா, கஸாரி, ஜமைக்கா லாவோஸ், மக்காவ் (SAR சீனா), மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், மொரிஷியஸ், மைக்ரோனேஷியா, மங்கோலியா, மொன்செராட், மொசாம்பிக், மியான்மர், நமீபியா, நேபாளம், நியு, பலாவ் தீவுகள், கத்தார், ருவாண்டா, சமோவா, செனகல், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, இலங்கை, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் லூசியா, செயின்ட் லூயிஸ் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துவாலு, வனுவாடு மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை அடங்கும்.
சில நாடுகளுக்கு விசா தேவையில்லை என்றாலும், பயணிகளுக்கு மின்னணு பயண அங்கீகாரங்கள் தேவைப்படலாம் அல்லது வந்தவுடன் விசா பெறலாம் என்று பயண நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். விமானங்களை முன்பதிவு செய்வதற்கு முன் சமீபத்திய விசா விதிகளை அறிந்து கொள்வது அவசியம். இந்தியர்களுக்கான விசா சலுகைகள் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்தின் பிரதிபலிப்பாகும். இது கலாச்சார பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது, சுற்றுலாவை மேம்படுத்துகிறது மற்றும் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஓய்வு தேடுபவர்களுக்கு பயணத்தை எளிதாக்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ