Shrutika Tips For Prolonged Beauty : சில படங்களிலேயே நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகில் ஃபேமஸான நாயகிகளில் ஒருவர், ஸ்ருதிகா. இவரை அனைவரும் ஶ்ரீ, தித்திக்குதே மற்றும் நள தமயந்தி உள்ளிட்ட படங்களில் பார்த்திருப்போம். பழம்பெரும் நடிகர் தேங்கா ஸ்ரீநிவாசனின் பேத்தியான இவர், நடிக்கும் காலத்தில் பெரிதாக பிரபலமாகவில்ல. இவர், சில வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த நேர்காணல் பெரிதாக வைரலானது.
“அவரா இவர்?” என்று ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போயிருந்த ஸ்ருதிகா, பார்ப்பவர்களிடம் சகஜமாக பேசி-பழகி அனைவரும் கவரும் நட்சத்திரமாக ஜொலித்தார். இவருக்கு சமையல் கலையிலும் பெரிய நாட்டம் இருந்ததால், அவருக்கு குக் வித் கோமாளி 3-யில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. இதில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அதன் பிறகு தனியாக குக்கிங் சேனலை நடத்தி வந்தார். அப்படியே இந்தி பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க, அங்கும் சென்று ஒரு கலக்கு கலக்கினார். தனது திறமையால் பல நாட்கள் அந்த இல்லத்தில் தாக்கு பிடித்த அவர், இறுதிப்போட்டிக்கு 10 நாட்கள் இருக்கும் முன்பு வீட்டிலிருந்து எவிக்ட் அனார்.
நல்ல சருமம் கொண்ட ஸ்ருதிகா, சருமத்தை இன்னும் பளபளப்பாக்க ‘இந்த’ ஜூஸ் குடிங்க என ஒரு ஜூஸ் குறித்து சாெல்கிறார். அது என்ன ஜூஸ் தெரியுமா?
இந்த காய் ஜூஸ்தான்:
நம்மை அழகுப்படுத்திக்கொள்ள பலவித அழகு சாதன பொருட்களின் பின்னால் அலையும் நாம், இயற்கையாக இருக்கும் சில விஷயங்களை மறந்தே போய்விடுகிறோம். அப்படி நாம் மறந்த ஒரு காய், பீட்ரூட். இதனை பயன்படுத்தி நமது சரும அழகை மேம்படுத்தலாம் என்கிறார் ஸ்ருதிகா.
இந்த காய், உடலுக்கு நன்மை பயப்பதோடு மட்டுமன்றி சருமத்தின் அழகையும் பாதுகாக்கிறது. பீட்ரூட், நம் முக அழகை மட்டுமல்ல, உதட்டின் அழகை கூட மாற்றுமாம். உங்கள் உதடு இயற்கையாகவே பிங்க் ஆக வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக பீட்ரூட் ஜூஸை குடிக்கலாம்-உதட்டிலும் தேய்க்கலாம்.
பீட்ரூட்டை, முக்கியமாக கோடை காலத்தில் சரும பராமரிப்பில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, இதில் நிறைந்திருக்கும் சத்துக்கள், நம் உடலுக்கு வலு கொடுக்கவும் உதவுமாம்.
வறட்சியான சருமம் கொண்டிருப்பவர்கள், அல்லது நீர்ச்சத்து குறைப்பாட்டால் சரும வறட்சியை பெற்றிருப்பவர்கள் இயற்கை முறையில் அதை சரிசெய்ய நினைத்தால் பீட்ரூட் சாபிடலாம், முகத்தில் தேய்க்கலாம். இது, இயற்கை மாய்ஸ்ட்ரைசராக செயல்படுகிறது. அது மட்டுமல்ல, பீட்ரூட்டில் 87% நீர் உள்ளடக்கமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ள நன்மைகள்:
பீட்ரூட்டில், வைட்டமின் சி உள்ளிட்ட சில ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை, கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையங்களை நீக்கவும் உதவுமாம். இதனால் முகமும் கூட பொலிவாகும் என கூறப்படுகிறது.
நம்மில் பெரும்பாலானோருக்கு முகப்பரு ஏற்படும். இதனை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவும் நற்சத்துக்கள் பீட்ரூட்டில் உள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், பிற இணைய பக்கங்களில் இருந்த தகவல்களை வைத்து எழுதப்பட்டவை. இதை நாங்கள் உறுதி செய்யவில்லை. இதற்கு ஜீ மீடியா எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மாநிறம் கொண்டவர்களின் முகம் ஜொலிக்க..ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லும் சீக்ரெட்!