ஆதார் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விரைவில் ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. E-ஆதார் என்று அழைக்கப்படும் இந்த செயலி மூலம், பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையின் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற பல தகவல்களை வீட்டிலேயே இருந்தபடியே திருத்த மற்றும் புதுப்பிக்க முடியும். இனி, அட்டையில் உள்ள விபரங்களை ஆதார் புதுப்பிப்புக்கான மையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.
UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் E-ஆதார் குறித்து கூறுகையில், சுமார் 1 லட்சம் ஆதார் புதுப்பிப்பு இயந்திரங்களில், 2,000 இயந்திரங்கள் இந்த புதிய அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இது ஆதார் புதுப்பிப்பு செயல்முறையை எளிதாக்கும். E-ஆதார் செயலியின் முக்கிய அம்சம் என்னவென்றால், வீட்டிலிருந்தே ஆதார் புதுப்பிப்பு வசதி கிடைக்கிறது. ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண்ணை போன்ற . QR குறியீடு அடிப்படையிலான ஆதார் பகிர்வு செயலின் மூலம் சாத்தியமாகும்.
இந்த செயலி குறித்து UIDAI தற்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், அது விரைவில் தொடங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மின்னணு நிர்வாக போர்டல் மற்றும் புதிய QR குறியீடு அமைப்பு
சில மாதங்களுக்கு முன்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆதார் நிர்வாக போர்ட்டலையும் (E-Governance Portal) அறிமுகப்படுத்தியது. ஆதார் தொடர்பான செயல்முறையை எளிதாகவும், வேகமாகவும், வெளிப்படையாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம், ஆதார் சரிபார்ப்பு கோரிக்கைகளை விரைவாக அங்கீகரிக்க முடியும். இப்போது UIDAI மற்றொரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரத் தயாராகி (New QR Code System) வருகிறது, அது QR குறியீடு அடிப்படையிலான சரிபார்ப்பு. இதன் மூலம், மொபைல் அல்லது செயலி மூலம் ஆதாரை மற்றவர்களுடன் பாதுகாப்பாகப் பகிரலாம். ஹோட்டல் செக்-இன், ரயில் டிக்கெட் சரிபார்ப்பு, அரசு சேவையில் அடையாள அட்டை சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண். இது சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகும். பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி போன்ற தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டு, நபரின் பயோமெட்ரிக் தரவு (கைரேகை, கருவிழி ஸ்கேன்) கூட எடுக்கப்படும். UIDAI சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கும் எந்த இந்திய குடிமகனும் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ