4 வருஷத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுபட்டது எப்படி? - அமித்ஷா சொன்ன டிப்ஸ்

Lifestyle Tips By Amit Shah: உடல் எடை குறைப்பில் இருந்து, சர்க்கரை நோயை விரட்டியது குறித்து அமித்ஷா அவரது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2025, 01:30 PM IST
  • தினமும் 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் - அமித்ஷா
  • தினமும் 6 மணிநேரம் நன்றாக தூங்குங்கள் - அமித்ஷா
  • உணவையும், தண்ணீரையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் - அமித்ஷா
4 வருஷத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுபட்டது எப்படி? - அமித்ஷா சொன்ன டிப்ஸ்

Lifestyle Tips By Amit Shah: உடலின் ஒவ்வொரு உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதே, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். ஒரு உறுப்புகளில் தொற்றோ, நோயோ ஏற்பட்டால் கூட உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிக முக்கியமாகும்.

Add Zee News as a Preferred Source

World Liver Day: கல்லீரலின் முக்கியத்துவம்

அதிலும் குறிப்பாக கல்லீரல் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. வளர்ச்சிதை மாற்றம், செரிமானம், நச்சு நீக்கம், ஊட்டச்சத்து சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் கல்லீரலின் பங்கு இருக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக கல்லீரல் தினம் ஏப். 19ஆம் தேதி கொண்டாடப்படும்.

கல்லீரல் நோய்களை தடுக்க உதவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை தனிநபர்கள் மேற்கொள்ளவும் இந்த விழிப்புணர்வு உதவும். 2025ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்திற்கான (World Liver Day 2025) கருப்பொருள் 'உணவே மருந்து' ஆகும். உங்கள் உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Union Minister Amit Shah) கலந்துகொண்டார்.

Lifestyle Tips: எடையை குறைக்க அமித்ஷா செய்தது என்ன?

அந்த நிகழ்வில் பேசிய அமித்ஷா தனது உடல் எடை குறைப்பு (Weight Loss Journey) அனுபவம் குறித்து பேசியிருந்தார். இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதனால் அவர்கள் இன்னும் 40-50 ஆண்டுகள் வாழ்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும் என்றும் அமித்ஷா ஊக்கமளிக்கும் வகையில் பேசியிருந்தார். 

உடற்தகுதியை அடைய அவர் மேற்கொண்ட பயணத்தை நினைவுக்கூர்ந்து பேசிய அமித்ஷா, தனது உணவுமுறையை மாற்றியது, தூக்க நேரத்தை அதிகரித்தது, தினசரி உடற்பயிற்சி செய்தது ஆகியவையே மட்டுமே தேவைப்பட்டது என்றார். மேலும் அவர் பேசியதாவது,"தேவையான அளவு தூக்கம், தண்ணீர், உணவு, வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை எனக்கு நிறைய கொடுத்துள்ளன.

Lifestyle Tips: சர்க்கரை நோயில் இருந்து விடுபட்டது எப்படி? 

இன்று, நான் எந்த வகையான அலோபதி மருந்தை எடுத்துக்கொள்ளாமலும், இன்சுலினில் இருந்து விடுபட்டும் உங்கள் முன் நிற்கிறேன். உடலுக்கு இரண்டு மணிநேர உடற்பயிற்சியையும், மூளைக்கு ஆறு மணிநேர தூக்கத்தையும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எனது சொந்த அனுபவம்" என்றார். இந்த விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

உலக கல்லீரல் தினத்தை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நேற்று (ஏப். 19) அவரது X பக்கத்தில்,"உலக கல்லீரல் தினத்தை நினைவுகூரும் வகையில், கவனத்துடன் சாப்பிடுவதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் அழைப்பு விடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. 

எண்ணெய் உட்கொள்ளலை குறைப்பது போன்ற சிறிய விஷயங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒன்றாக, உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம்" என பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க | 3 மாதங்களில் 9 கிலோ எடையை குறைத்த ஜோதிகா! அவரே சொன்ன பிட்னஸ் டிப்ஸ்!

மேலும் படிக்க | 20 கிலோ எடையை அசால்டாக குறைத்த குஷ்பு! சீக்ரெட் இது ஒன்னுதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News