)
இன்றைய காலகட்டத்தில் இந்திய குடிமக்களாக இருக்கும் அனைவருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. பள்ளி-கல்லூரி சேர்க்கை, வங்கி தொடர்பான பணிகள் அல்லது அரசாங்கத் திட்டங்களில் பயன்பெறுதல், புதிய வேலையில் சேருக்கும் போது கொடுக்கும் அடையாள ஆவணம் என, எல்லா இடங்களிலும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி அல்லது பிற தகவல்கள் தவறாக இருப்பதைக் காணலாம். அதிலும், மிக முக்கியமாக, இடமாற்றத்தின் போது, முகவரியை மாற்றும் தேவையும் அடிக்கடி எற்படுகிறது. ஆதார் அட்டையில் முகவரி உள்ளிட்ட சில தகவல்கள் தவறாக உள்ளதன் காரணமாக, பல நேரங்களில் முக்கியமான வேலைகளில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை இலவசமாக கட்டணம் எதுமின்றி திருத்தம் செய்து அப்டேட் செய்ய, UIDAI ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இலவச ஆதார் புதுப்பிப்பு தொடர்பான முக்கியமான விவரம் அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்...
இலவச ஆதார் புதுப்பிப்பு வசதியை எப்போது வரை பெற முடியும்?
UIDAI சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு முக்கியமான தகவலில், 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டைகள் உள்ளவர்கள் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என முன்னதாக தெரிவித்துள்ளது. இந்த புதுப்பிப்பை, ஜூன் 14, 2025 வரை முற்றிலும் இலவசமாகச் செய்யலாம். அதாவது, உங்கள் ஆதாரில் தவறான தகவல் ஏதேனும் இருந்தால், இந்த தேதிக்கு முன் அதை சரிசெய்யவும். இதற்குப் பிறகு, நீங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க, அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆதார் எண்ணை ஆன்லைனில் எவ்வாறு புதுப்பிப்பது?
ஆதாரை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிப்பது மிகவும் எளிதானது. உங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியிலிருந்து வீட்டிலேயே அமர்ந்த படியே இதைச் செய்யலாம். இங்கே இதற்கான வழிமுறை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
1. முதலில் UIDAI வலைத்தளமான https://myaadhaar.uidai.gov.in க்குச் செல்லவும்.
2. இங்கே உள்நுழை என்பதைக் கிளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
3. பின்னர் கேப்ட்சா குறியீடு மற்றும் OTP ஐ உள்ளிட்டு உள்நுழையவும்.
4. இப்போது 'Document Update' விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
5. இதற்குப் பிறகு, நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தகவலை தேர்ந்தெடுத்து அதன் துணை ஆவணத்தைப் (supporting document) பதிவேற்றவும்.
6. எல்லாவற்றையும் சரியாகச் சரிபார்த்த பிறகு, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
7. நீங்கள் சமர்ப்பித்தவுடன், உங்களுக்கு ஒரு சேவை கோரிக்கை எண் (Service Request Number ) கிடைக்கும், அதன் மூலம் உங்கள் புதுப்பிப்பு நிலையைக் கண்காணிக்கலாம்.
ஆதாரை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
உங்கள் ஆதார் அட்டையில் தவறான தகவல்கள் இருந்தால், அரசாங்கத் திட்டங்களைப் பயன்படுத்துவதில் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அல்லது வங்கி மற்றும் அடையாள அட்டை தொடர்பான எந்தவொரு பணியை மேற்கொள்ளும் போதும் சிக்கல் ஏற்படலாம். எனவே, UIDAI வழங்கும் இந்த இலவச அப்டேட் வசதி அனைவருக்கும் ஒரு பெரிய வாய்ப்பாகும். எந்த செலவும் இல்லாமல், உங்கள் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை மீண்டும் ஒருமுறை சரிசெய்து புதுப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ