Viagra Side Effects : வயாகரா, "சின்ன நீல மாத்திரை" என்று பிரபலமாக அறியப்படும் இந்த மருந்து, ஆண்களின் ஈரெக்டைல் டிஸ்ஃபங்க்ஷன் (Erectile Dysfunction - ED) பிரச்சினைக்கு உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?. 1990-களின் தொடக்கத்தில், ஃபைசர் (Pfizer) மருந்து நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆஞ்சைனா (Angina - இதயத்தில் ஏற்படும் வலி) எனப்படும் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றனர். அவர்கள் சில்டனாஃபில் (Sildenafil) என்ற மருந்தை உருவாக்கினர், இது PDE5 எனப்படும் புரதத்தைத் தடுக்கும். இது இரத்த நாளங்களை விரிவாக்கும் திறன் கொண்டது.
ஆனால் மருந்து சோதனையின் போது, சில ஆண்கள் தலைவலி, குமட்டல் போன்ற பக்க விளைவுகளுடன், ஈரெக்ஷன் (Erection) ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இது ஆராய்ச்சியாளர்களுக்கு முழுமையான ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் மருத்துவர்கள் ஈரெக்டைல் டிஸ்ஃபங்க்ஷனுக்கு மருந்து தேடவில்லை. மாறாக, இதயத்தில் ஏற்படும் வலிக்காக மருந்து தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆச்சரியமான மருத்துவ முடிகளை பெற்றனர்.
அதேநேரத்தில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த சோதனையின் முடிவில், சில பங்கேற்பார்கள் இந்த மருந்துகளை திருப்பித் தர மறுத்துவிட்டனர், மேலும் அதை தொடர்ந்து எடுக்க விரும்பினர். இதைப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள், இதய நோய்க்கு பதிலாக ED-க்கு இந்த மருந்தை சோதிக்கத் தீர்மானித்தனர். இதன் விளைவாக, சில்டனாஃபில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் இப்போது வயாகரா என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது.
வயாகரா எப்படி வேலை செய்கிறது?
இந்த மருந்து PDE5 என்ஸைமைத் தடை செய்கிறது. இது சைக்ளிக் ஜிஎம்பி (cGMP) என்ற இரசாயனத்தின் அழிவைத் தடுக்கிறது. இதனால், இரத்த ஓட்டம் அதிகரித்து, ஆண்களுக்கு ஈரெக்ஷன் உதவுகிறது. 1998-ல் FDA ஒப்புதல் அளித்த பிறகு, வாரத்தில் 10 லட்சம் மருந்துகள் விற்பனையாயின. தற்போது உலகம் முழுவதும் 6.2 கோடி பேர் வியாக்ரா பயன்படுத்துகின்றனர். பின்னர், இதய நோய்களுக்கும் (பல்மனரி ஹைப்பர்டென்ஷன்) இது பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது வியாக்ரா ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு தான். ஆனால் அது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய பரிசாக மாறியது. இன்று இது ஆண்களின் திறமையை மீண்டும் கொண்டுவரும் ஒரு முக்கிய மருந்தாக உள்ளது.
வயாகராவின் நன்மைகள் (Benefits of Viagra)
ஈரெக்டைல் டிஸ்ஃபங்க்ஷனை சரிசெய்கிறது. ஆண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உறுதியான ஈரெக்ஷனை அடைய உதவுகிறது. இதனால், பாலியல் திறனை மீண்டும் பெற உதவுகிறது. 30 முதல் 60 நிமிடங்களுக்குள் வேலை செய்யத் தொடங்கும். 4-5 மணி நேரம் வரை பலன் தரும். பாலியல் உறவில் தம்பதியருக்கு இடையே மன நிம்மதியையும், திருப்தியையும் ஏற்படுத்துகிறது. பல்மனரி ஹைப்பர்டென்ஷன் (PAH) போன்ற இதய நோய்களுக்கும் சில நேரங்களில் பரிந்துரைக்கப்படுகிறது.
வயாகராவின் தீமைகள்
தலைவலி, முகம் சிவத்தல், இரைப்பை கோளாறுகள், குமட்டல், மூக்கு அடைப்பு இருக்கும். சில நேரங்களில் உடல் வெப்பமாகி, திடீர் கீழே விழுதல் கூட நடக்கலாம். கண்பார்வை மங்கல், அளவுக்கு அதிகமான தலைவலி, இதயத் துடிப்பு வேகமாக அல்லது மெதுவாக துடித்தல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
யார் எடுக்கக் கூடாது?
நைட்ரேட் மருந்துகள் (ஹார்ட் அட்டாக் மருந்துகள்) எடுப்பவர்கள், குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கல்லீரல்/சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள், 18 வயதுக்குட்பட்டோர் சாப்பிடக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுக்கக் கூடாது. ஆல்கஹால் உடன் கலக்க வேண்டாம். 24 மணி நேரத்திற்குள் ஒன்றுக்கு மேல் மாத்திரை எடுக்க வேண்டாம்.
மேலும் படிக்க | பால், சர்க்கரை வேண்டாம்.. சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
மேலும் படிக்க | மாங்காய் எலுமிச்சை ஊறுகாய்க்கு நோ சொல்லுங்க, முந்திரி-பாதாம் ஊறுகாய ட்ரை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ