இரண்டு பாம்புகள் ரொமான்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், இரண்டு பாம்புகள் ரொமான்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


"பாம்பு என்றால் படையும் நடுங்கும்" என்ற பழமொழியை யாராலும் மறுக்க முடியாது. பாம்புகளில் பலவகை உண்டு. அவற்றில் சில விஷமுடையது, சிலவை விஷம் அற்றவை. என்னதான் பார்பதற்க்கு சிறியதாக இருந்தாலும் இதை பார்த்தால் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தும். இணையத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், கடுமையான போரில் சண்டையிடும் இரண்டு பாம்புகளின் வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. 


மேற்கூறிய வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


வீடியோவில் இரண்டு எலி பாம்புகள் தங்களைச் சுற்றிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் தண்ணீரில் சண்டையிடத் தொடங்கினர், ஆனால் போர் தீவிரமடைந்ததால், அவர்கள் வெளியேறி, அவற்றின் பெரிய அளவைப் பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்தனர்.


அதிகாரி நந்தா தனது ட்வீட்டில், பாம்புகள் தங்கள் பிரதேசத்தை நிலைநாட்டவும், தங்கள் துணையை பாதுகாக்கவும் போராடுகின்றன என்று கூறினார். "எலி பாம்புகள் ஆதிக்கத்திற்காக போராடுகின்றன. இரண்டு ஆண் தங்கள் நிலப்பரப்பை வரையறுக்கவும் தங்கள் துணையை பாதுகாக்கவும் போராடுகின்றன" என்று அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார்


ALSO READ | கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு முதல் பலியான German shepherd வகை நாய்


அந்த கிளிப்பை இங்கே பாருங்கள்:



இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து, சுமார் 5K பார்வைகளைப் பெற்றது. கிளிப்பைப் பற்றி நெட்டிசன்கள் நிறைய கூறியுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த கருத்துகளை பதிவிட்டு வந்தனர். பாம்புகள் இனச்சேர்க்கை செய்கிறதா என்று பல பயனர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால் அதிகாரி நந்தா அது தவறான கருத்தை என்பதை தெளிவுபடுத்தி, "இது தவறான கருத்து" என்று கூறினார்.