மழைக்காலத்தில் பரவும் 5 நோய்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

S.Karthikeyan
Aug 01,2024
';


மழைக்காலத்தில் பரவும் 5 நோய்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

';


சில அதிதீவிரமான காய்ச்சல்களும் வரும். காலரா முதல் டெங்கு வரை வரிசையாக காய்ச்சல்களும் வரிசை கட்டிக் கொண்டிருக்கும்.

';


இதனால் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். என்னென்ன காய்ச்சல்கள் வரும்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை பார்க்கலாம்.

';


வயிற்றுப்போக்கு - மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இதனால் வாந்தி மற்றும் பலவீனத்தை ஏற்படும். வயிற்றுப்போக்கு உடலில் நீரிழப்பு ஏற்படுத்தும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

';


காலரா - அசுத்தமான நீர் அல்லது உணவை உட்கொள்வதால் ஏற்படும். கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் நீரிழப்பு இதன் அறிகுறிகள். காலராவைத் தவிர்க்க, சுத்தமான தண்ணீரைக் குடிக்கவும், உணவுகளை சாப்பிடவும்.

';


டைபாய்டு - தண்ணீரால் பரவும் நோய். அதன் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு. இது வராமல் இருக்க, சுத்தமான தண்ணீரைக் குடித்து, உணவுப் பொருட்களை நன்கு கழுவி சமைக்கவும்.

';


டெங்கு மற்றும் மலேரியா - இந்த இரண்டு நோய்களும் கொசுக்கடியால் ஏற்படுகின்றன. காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, சோர்வு போன்றவை அவற்றின் அறிகுறிகளாகும்.

';


இந்த நோய்களைத் தவிர்க்க, கொசுவலை பயன்படுத்துதல், உடலை மூடியிருக்குமாறு உடையணிய வேண்டும், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

';


பொதுவாக இந்த நோய்களை தவிர்க்க சுத்தமான தண்ணீர், சுத்தமாக உணவுகளை சமைத்து, அதை பத்திரப்படுத்தி சாப்பிடுதல், பச்சையாக பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவி சாப்பிடுதல்,

';


தெரு உணவுகளை தவிர்த்தல், கைகளை சுத்தமாக வைத்தல், கொசுகளிடம் இருந்து பாதுகாப்பு, தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்

';

VIEW ALL

Read Next Story