காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையாது. மாறாக மதியம் அதிகமாக சாப்பிட வைக்கும்.
காலையில் எழுந்தவுடன் காபி அல்லது ஜூஸ் போன்ற சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களை குடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லை என்றால் வளர்சிதை மாற்றத்தை குறைக்கும்.
அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை காலையில் சாப்பிட கூடாது. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எந்திரிக்க வேண்டும். முறையான தூக்கம் இல்லை என்றாலும், உடல் எடை அதிகரிக்கும்.
காலையில் எழுந்ததும் சிறிது நேரம் உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும்.
வேலைக்கு செல்லும் அவசரத்தில் அவசரமாக சாப்பிட்டு, சிறிது நேரத்தில் பசிக்க ஆரம்பித்து தேவை இல்லாததை சாப்பிட வைக்கும்.