ஆண்டவன் சோதிப்பது உன்னை மட்டும் இல்லை உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளையும் தான்.
எந்தவொரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்.
ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதனை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்.
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பத்தை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
தோல்வி அடைந்தவன் மாற்ற வேண்டியது வழிகளைதான் தன் இலக்கை அல்ல.
வாழ்க்கை என்பது நீ நினைப்பதுபோல் இருப்பதில்லை. ஆனால் நீ நினைப்பதுபோல் மாற்றி அமைக்கக்கூடியது.
உலகம் உன்னை அறிவதை விட உன்னை பற்றி உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.