குழந்தைகளுக்கு பிடித்தமான வெஜிடபிள் கட்லெடை மாலை நேரத்தில் செய்து கொடுங்குள். இது சுவையாகவும் ஹெல்தியாகவும் இருக்கும்
வெஜிடபிள் கட்லெடை எப்படி செய்து, குழந்தைகளுக்கு பரிமாறலாம் என்பது குறித்து இதில் பார்ப்போம்
பீன்ஸ், பீட்ரூர், உருளை, கேரட், ஸ்வீட் கார்ன், பச்சை பட்டாணி, சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள் எடுத்துக் கொள்ளவும்
இதில் இருக்கும் காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும். குக்கர் என்றால் 2 விசில் வந்ததும் இறக்கவும்
காய்கறிகளை நன்றாக மசித்து, அதில் உப்பு, சாட் மசாலா, காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், கரம் மசாலாவை சேர்க்கவும்
பின், அவற்றை சிறுசிறு உருண்டையாக எடுத்து, வடை போல் சற்று தடினமாக தட்டி, பிரெட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
இப்படி அனைத்தையும் உருட்டி, பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின், தவா வைத்து எண்ணெய் ஊற்றி அதனை பொன்னிறமாக வறுத்து எடுத்தால், கட்லெட் ரெடி.
இதனுடன் குழந்தைகளுடன் புதினா, கொத்தமல்லி, 2 மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸில் அரைக்கவும். இதனை கட்லெட்டுடன் குழந்தைகளுக்கு பரிமாறவும்.