கர்ப்பம் உறுதி என்பதை காட்டும் அறிகுறிகள்...!

S.Karthikeyan
Dec 20,2024
';


இன்றைய வாழ்கை சூழலில் கர்ப்பம் தரிப்பது என்பது பலரிடையே மிகவும் சவாலான காரியமாக இருக்கிறது.

';


ஆனால் பெண்ணின் உடல் கருவை சுமக்க துவங்கிய முதல் நாளிலிருந்தே அதற்கான அறிகுறிகளைக் காட்ட தொடங்கிவிடும்.

';


மாதவிடாய் சுழற்சி தள்ளிச் சென்றால் இதனை கர்ப்பம் தரித்ததற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

';


சில பெண்களுக்கு சமையல் செய்யும் பொழுது ஏன் ஏதேனும் அடுபில் கொதித்தால் கூட குமட்ட தொடங்கி விடும். இவ்வாறு வாசனைகளில் மாற்றங்கள் இருந்தால் கர்ப்பத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.

';


கர்ப்ப காலத்தில் சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு வழக்கத்தை விட மிக அதிகமாகவே இருக்கும். பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவிலும் இவை இருந்து கொண்டே இருக்கும். இதை கர்ப்பகால அறிகுறியாக எடுத்து கொள்ளலாம்.

';


கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இந்த சோர்வு வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும். இவற்றை கர்ப்பகால அறிகுறியாக கருத்தில் கொள்ளலாம்.

';


கர்ப்பம் தரித்தால் பசி உணர்வு ஏற்படுவது முதல் உணவு விருப்பங்கள் வரை அனைத்திலும் மாற்றம் ஏற்படும். பிடித்த உணவுகள் பிடிக்காமல் போகும்.

';


பிடிக்காத உணவுகள் பிடிக்க தொடங்கும். ஃபுட் கிரேவிங்க்ஸ் அதிகரிக்க தொடங்கும். பசித்து கொண்டே இருக்கும் ஆனால் சாப்பிட முடியாது. இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கர்ப்பம் தரித்தனால் இருக்கலாம்.

';


கர்ப்ப கால அறிகுறிகுறி என்பது பெண்ணுக்கு பெண் உடல் வாகை பொறுத்து மாறுபடும். அதனால் கர்ப்பம் தரிப்பதை எதிர்பார்த்திருக்கும் பெண்கள் இந்த அறிகுறிகளை கவனித்தல் அவசியம்.

';

VIEW ALL

Read Next Story