முடி ஆரோக்கியமாக இருக்க புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
புரோட்டின் நிறைந்த உணவுகள் முடியின் மயிர்க்கால்களை தூண்டி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன.
பாதாமில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. இவை முடி உதிர்வை தடுத்து, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொண்டைக்கடலை முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இவற்றில் புரதம் அதிகளவு நிறைந்துள்ளது.
புரதத்தின் முழு மூலமாக முட்டை உள்ளது. இவை அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
கோழி மார்பகத்தில் அதிக புரத சத்துள்ளது. இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவற்றை வழங்குகிறது.
பாலாடைக்கட்டியில் அதிகளவு புரதம் நிறைந்துள்ளது, இவை இது முடியின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.
பாலாடைக்கட்டியில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் முடி உதிர்வை குறைக்க உதவுகிறது.