ஒருகப் கவுனி அரிசி சமைக்கும் ஒருநாள் முன்பு இரவே ஊறவைக்கவும். 8 மணி நேரம் ஊற வேண்டும். ஊறிய பின், மறுநாள் அரைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் வெல்லம், கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லத்தை கரைக்க வேண்டும். பிறகு அதை வடிக்கட்டி தனியாக வைக்கவும்
ஒரு பாத்திரத்திதை அடுப்பில் வைத்து, அரிசி விழுது, வெல்லத்தை போட்டு கிளற வேண்டும். கலவை கெட்டியாகும் வரை கிளறவும்
பிறகு, அதில் தேய்காய்ப்பால், நெய் சேர்த்து கிளறவும். பிறகு ஏலக்காய் தூள் சேர்க்கவும்
கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி அல்வா தயார்
இதனை பெண்கள், குழந்தைகள் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது