கோல்டு காஃபி தயாரிக்க பால், காபித்தூள், சர்க்கரை, ஐஸ் கட்டிகள், ஐஸ்கிரீம் ஆகியவை எடுத்துக் வைத்துக் கொள்ளுங்கள்
முதலில் காபி தூளையும், சர்க்கரையும் ஒரு மிக்சியில் போட்டு, சிறிதளவு பால் சேர்த்து, காபியும் சர்க்கரை முழுமையாக கரைந்து நுரையாக வரும் வரை கலக்க வேண்டும்
பிறகு, ஐஸ் கட்டிகளை சேர்த்து கலக்கவும். கெட்டியாகவும் நுரை போலவும் கலக்க வேண்டும். அடுத்தாக மீதமுள்ள பாலைச் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.
பின்னர் ஐஸ்கிரீம் சேர்த்து இறுதியாக மீண்டும் மிக்ஸ் செய்ய வேண்டும்.
தயார் செய்த காபியை 10 நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து அதன் பிறகு பரிமாறலாம்.
இதுபோன்று கஃபே ஸ்டைலில் இருக்கும். இது உங்கள் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
உங்கள் வெயிலுக்கு இதமான இந்த கோல்டு காஃபி நீங்கள் தயார் செய்து குடிக்கலாம்.