தயிர் பூரி செய்ய, பானி பூரி, உருளைக்கிழங்கு, சாட் மசாலா, வெங்காயம், உப்பு, தயிர், தக்காளி, மிளகாய் துள், சீரகத்தூள் எடுத்து கொள்ளவும்.
முதலில் உருளைக்கிழங்கை வேகத்து, உரித்து தனியாக எடுத்து வைக்கவும்
பின்னர், புளி சட்னி தயார் செய்ய, புளியை ஊறவைத்து புளி தண்ணீரை தனியாக எடுக்கவும்
அதில் பேரீட்சை பழம், வெல்லம், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து, கொதி வந்ததும் மிக்ஸில் அரைத்து இறக்கவும்
இப்போது ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை மசித்து, அதில் சாட் மசாலா தூள், உப்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து கலக்கவும்
மற்றொரு கிண்ணத்தில் உப்பு, தயிர் சேர்த்து கலக்கவும். இப்போது ஒருபானிபூரியை எடுக்கவும்
அதில், உருளைக்கிழங்கு மசாலா, புளி சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காயம், தயிரை ஊற்ற வேண்டும்.
மிக்சர், பொடியாக கொத்தமல்லி சேர்த்து, இதனுடன் மாதுளை விதையை சேர்த்தால் தயிர் பூரி ரெடி