பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, நல்லெண்ணை, பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மட்டன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு, தேங்காய்
முதலில் தேங்காய்யை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டவும்
நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தையும் பச்சை மிளகாய்யையும் சேர்த்து பொண்ணிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி சேர்க்கவும்.
இதையடுத்து மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மட்டன் சேர்க்கவும்.
இதையத்து குக்கரில் 6 முதல் 7 விசில் விட்டு எடுத்து அதில் அரைத்து வைத்த தேங்காவை சேர்க்கவும்.
இதோடு தனியா தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.