புளிக்காத இட்லி மாவு, சமையல் சோடா, ஆரஞ்சு கலர் பவுடர், சர்க்கரை மற்றும் எண்ணெய்.
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, சோடா, கலர் பவுடர் சேர்த்து கலக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக போட்டு நன்று வெந்தவுடன் எடுக்கவும்.
இறுதியாக அந்த உருண்டைகளை சீனி பாகில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்தால் தேன் மிட்டாய் ரெடி.