முருங்கை ஒரு ஆரோக்கியமான காய்கறி. இதில் வைட்டமின்கள் ஏ, சி, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதம் அதிகளவில் உள்ளன.
முருங்கை பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது; முருங்கைக்காயை குழம்பு, சாம்பார், காய் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
ஆனால், சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கை பக்கோடா நீங்கள் எப்போதாவது சுவைத்துப் பார்த்திருக்கிறீர்களா? இதன் செய்முறையை இப்போது தெரிந்துகொள்வோம்.
முருங்கை பக்கோடா செய்வதற்கு, சுமார் 100 முதல் 200 கிராம் முருங்கை இலைகள் அல்லது பூக்களை எடுத்து, அவற்றை நன்கு கழுவி உலர்த்தவும்.
மாவுக்கலவையைத் தயாரிக்க, ஒரு கிண்ணத்தில் 1 கப் கடலை மாவு, முருங்களை இலைகள் மற்றும் பூக்கள், நறுக்கிய 1 வெங்காயம், பச்சை மிளகாய், தனியாத் தூள், ஓமம், பெருங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
இதனுடன் தண்ணீர் சேர்த்து, கெட்டியான மாவைத் தயார் செய்யவும். பின்னர் பொரிப்பதற்கு, ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் தயாரித்து வைத்துள்ள மாவை பக்கோடா போன்று போடவும்.
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, அவற்றை மிதமான தீயில், அவ்வப்போது திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.