பலாக்கொட்டை - 20 முதல் 25, பொட்டுக்கடலை மாவு - 3 ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, சோம்பு - 1 ஸ்பூன், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
முதலில் பலாக்கொட்டைகளை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
விசில் அடங்கியதும், பலாக்கொட்டைகளின் சூடு ஆறும் வரை காத்திருக்கவும். அதன் பிறகு மேல் இருக்கும் வெள்ளை நிறத் தோலை முழுமையாக உரித்து, உள்ளே இருக்கும் கொட்டைகளை மட்டும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த பலாக்கொட்டை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல், கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தழையைச் சேர்க்கவும்.
அடுத்ததாக, இதனுடன் 3 ஸ்பூன் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாகக் கைகளால் பிசையவும். உருண்டை பிடிக்கும் பதத்திற்கு மாவு பக்குவமாக வர வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறிய எலுமிச்சை பழ அளவிற்கு மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து விரிசல் இல்லாமல் அழகான உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டில் வரிசையாக அடுக்கி வைக்கவும்.
வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றிச் எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு மெதுவாகத் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான்! மொறுமொறுப்பான, சுவையான 'பலாக்கொட்டை கோலா உருண்டை' தயார். மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சாப்பிட இது ஒரு அருமையான ஹெல்தி ஸ்நாக்ஸ்!