பழம்பெரும் பாடகி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாள் ஆண்டு இது
கானக்குயில் இசை அரசி என பலராலும் போற்றப்படும் திருமதி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பாரதரத்னா விருது பெற்றவர்
வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பெற்றவர் எம்.எஸ் அம்மா
ஆடை வடிவமைப்பாளர் அனு பரதசாரதியுடன் கைகோர்த்து, பிரபல நடிகை வித்யா பாலன் எம்.எஸ் அம்மாவின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தினார்
என்றென்றும் புகழ் மங்காமல் பட்டொளி வீசி பறக்கும் எம்.எஸ் அம்மாவின் இளமைத் தோற்றத்தை கண்ணுக்கு கொண்டுவந்த புகைப்படங்கள் இவை...
1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி
அவரது முழுப் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதாகும். அதுவே எம்.எஸ் அம்மா என்று சுருக்கி அன்புடன் அறியப்படும் பெயராக மாறியது
விடியற்காலையில் சுப்ரபாதம் கேட்கும்போது எம்.எஸ் அம்மாவின் குரலை மறக்கவே முடியாது...