தொடர்ந்து படிக்காமல், 25 நிமிடங்கள் முழு கவனத்துடன் படித்துவிட்டு, 5 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள்.
நீங்கள் எதற்காகப் படிக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் இலக்கு குறித்த தெளிவு, படிக்கும்போது ஏற்படும் சோம்பேறித்தனத்தைப் போக்கும்.
நீங்கள் படித்த தகவல்களை ஒரே நாளில் மனப்பாடம் செய்யாமல், 1, 3, 7 நாட்கள் என இடைவெளி விட்டு திரும்பத் திரும்ப படியுங்கள்
படிக்கும் தகவல்களை சத்தமாக தாளத்துடன் வாசிப்பது (Chanting) உங்கள் காதுகளுக்கும் மூளைக்கும் பயிற்சியாக அமைந்து, தகவலை மிக எளிதாகப் பதிய வைக்கும்.
படிக்கும் விஷயங்களை உங்கள் மனதில் ஒரு கற்பனை படமாக மாற்றிப் பாருங்கள். படங்கள் மற்றும் கதைகள் மூலம் படிக்கும்போது மூளை அதை மறக்கவே மறக்காது.
பதட்டமும் பயமும் நினைவாற்றலைக் குறைக்கும். எல்லாவற்றையும் கச்சிதமாக முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் குறைத்து, அமைதியான மனநிலையுடன் படியுங்கள்.
படிக்கும் முன் 5-10 நிமிடங்கள் லேசான உடற்பயிற்சி அல்லது ஸ்ட்ரெச்சிங் செய்யுங்கள்.