கைகளின் அழகை அதிகரிக்கும் வேலையை நகங்கள் செய்கின்றன. நீங்களும் நீண்ட நகங்களை விரும்பினால், இந்த வீட்டு வைத்தியத்தாய் முயற்சிக்கவும்.
ஆரஞ்சு ஜூன் நகங்களுக்கு தேவையான உயிர் சத்தைக் கொடுக்கிறது. ஆரஞ்சு ஜூஸை 10 நிமிடங்கள் விரல்களில் ஊற வைக்கவும். பின் அதை சுத்தப்படுத்தவும்.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயைக் கொண்டு உங்கள் நகங்களை மசாஜ் செய்வது நகங்கள் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லில் 10 துளிகள் ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் நகங்களில் தடவவும்.
வைட்டமின் சி நகங்களின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே எலுமிச்சை சாறு உங்களுடைய கை நகங்களில் தினமும் ஒருமுறையாவது தேய்க்கவும்.
பூண்டில் செலினியம் நிறைந்துள்ளது, இது நக வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
ஓடுகளில் உள்ள கூடுதல் கால்சியம் உங்கள் நகங்களை வலுப்படுத்த உதவுகிறது.
கீரைகளில் அதிக அளவிலான ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் B9 நிரம்பியுள்ளது. இது நகங்களின் வளர்ச்சி மற்றும் அதனை வலுப்படுத்த உதவுகிறது.