மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்
பிறர் ஏதேனும் நோய் பற்றி பேசும்போது, தனக்கு அந்த நோய் இருப்பதாக நினைத்துக் கொள்வது
அடிக்கடி நோய்கள் மற்றும் அதற்கான அறிகுறிகளை இணையத்தில் தேடி பார்த்து, அந்த அறிகுறிகள் தங்களுக்கு இருக்கின்றதா என பரிசோதிப்பது
ஒரு சிலர் ஒரு நோய் தனக்கு இருப்பதாக நினைத்து கற்பனை செய்துக்கொண்டு அதற்கான மருத்துவ பரிசோதனைகளையும் கூட செய்வார்கள்.
அவ்வாறு எடுத்து கிடைக்கக்கூடிய பரிசோதனைகளை நம்பாமல் அது பொய்யாக இருக்குமோ என்ற சிந்தனையும் இவர்களுக்கு தோன்றும்.
ஆன்சைட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் எதிர்காலத்தில் என்னென்ன ஆகும் என்பதை நினைத்து நினைத்து நிகழ்காலத்தில் கவலையிலேயே இருப்பார்கள்.
இதற்கு காரணம் அதிகளவில் சமூக வளைத்தளங்களை பயன்படுத்துவதாகும். இதுதவிர மன ஆரோக்கியம் பேணாமையும் மற்றொரு காரணம்