இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பிரத்யேகமான திட்டம் ஆகும்.
10 வயதாகும் வரை பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கலாம்
சுகன்யா சம்ருதி என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் பெற்றோர் எத்தனைக் கணக்குகளை திறக்கலாம் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது
சேமிப்புத் திட்டத்தின் கீழ், பெற்றோர் அதிகபட்சமாக இரண்டு கணக்குகளைத் திறக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதில் உள்ள விதிவிலக்குகள் பெற்றோரை இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் திறக்க அனுமதிக்கிறது
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டத்தில் பெற்றோர் 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே திட்டம் தொடங்க முடியும் என்று சொன்னாலும், ஒரே பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைகள் இரண்டாக இருந்தாலும் மூன்றாக இருந்தாலும் அவர்களுக்கு என தொடங்கப்படும் கணக்குகள் (2,3....) தவிர மற்றுமொரு பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கும் கணக்குத் தொடங்கலாம்
பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் பெண் குழந்தையின் பெயரில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தொடங்கலாம்
ரூ.1000 வைப்புத்தொகையுடன் தபால் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் செல்வ மகளுக்கு சேமிக்கத் தொடங்கலாம்
வங்கிக் கணக்கு தொடங்குவதற்குத் தேவையான ஆவணங்களுடன், பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் கணக்கில் 15 ஆண்டுகள் வரை பணம் கட்டலாம், அதற்கு 6 ஆண்டுகள் கழித்து முதிர்வுத்தொகை உங்களின் செல்ல மகளுக்குக் கிடைத்து, அவள் “செல்வ மகள்’ ஆகுவாள்...