பணம் சம்பாதிக்க மிக முக்கியமான மந்திரம்
நீங்கள் மிகப்பெரிய கோடீஸ்வரராக வேண்டும் என விரும்பினால் பண மந்திரம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
பணம் எப்போதும் அதனை சரியாக நிர்வாகம் செய்பவர்களிடம் மட்டுமே குவியல் குவியலாக சென்று சேரும்
பண வரும் வழிகள் எப்போதும் நான்குக்கும் மேற்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது, பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும்
நீங்கள் எப்போதும் பணத்துக்காக உழைக்கவே கூடாது. தூங்கும்போது கூட பண வரவு இருக்க வேண்டும்
அதற்கு நீங்கள் சரியான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, பிஸ்னஸ் என ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்யுங்கள்
செலவுகள் எப்போதும் வருவாய்க்கு அதிகமாக இருக்கவே கூடாது. கடன் 30 விழுக்காட்டை கடக்கவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
உடனடியாக பணக்காரராக வேண்டும் என விரும்பாதீர்கள். 5 முதல் 10 ஆண்டுகள் என்ற இலக்கை நிர்ணயித்து அதன்படி செயல்படுங்கள்
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய உங்களின் திட்டமிடல் கோடீஸ்வரர் கனவை நனவாக்கும். எல்லா நேரமும் அதிர்ஷடம் கை கொடுக்காது
உழைப்பு மட்டுமே உங்களை மென்மேலும் உயர்த்தும். அவ்வப்போது அதிர்ஷ்டம் தேடி வரும். உழைப்பு இல்லாமல் அதிர்ஷ்டம் வரவே வராது.